தன் இரக்கம் 135 தாய் இருக்கின்றது. போரில் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வருதல் இயற்கை வெற்றி கிடைக்கும் காலங்களில் மட்டற்ற மகிழ்ச்சியும். தோல்வியுறும் காலங்களில் எல்லையற்ற துன்பமும் அடைவது வீரர்க்கு உறுதி பயவாது. இராவணன் இதை உணர்ந்தவன் அல்லன். அவன் வாழ்க்கையில் தோல்விகள் ஏற்படாமல் இல்லை. கார்த்த வீரியனிடத்தும், வாலியினிடத்தும் அவன் படுதோல்வி யுற்றான்; கயிலையை எடுக்கச் சென்று அவமானப் பட்டான். ஆனால், இவைகளைத் தனக்கு நேர்ந்த அவமதிப்பாகக் கருதவில்லை. கயிலையை எடுத்தவன் என்று அவனே தன்னைப் பெருமையாகப் பேசிக் கொள்ளுகிறான் என்றால், தோல்விகளைத் தைரியத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனோதிடம் இராவணனிடத்தில் மிகுதியாய் இருந்தது என்பதில் ஐயம் உண்டோ? இருப்பினும், இராவணன், அனுமன், சுக்கிரீவன் இவ்விருவர் செயல்களையும் குறித்து மிகமிக வருந்துகிறான். இச்செயலின் காரணத்தை ஆராய, இராவணன் மாட்சி நமக்கு விளங்குகின்றது. கார்த்தவீரியனிடத்திலும் வாலியினிடத்திலும் அவன் தோற்றது போரில் நேர்ந்த தோல்விகள். ஆகவே, போர் வீரனாகிய இராவணன் அவைகளுக்குக் கலங்கவில்லை. கயிலையை எடுக்கச் சென்று கைகளை இழந்ததும் வருந்தத் தக்கதன்று. தேவர்களும், நான்முகனுங்கூடக் கயிலையை எடுக்க முற்பட்டிருந்தால், அவன் கதியையே அடைந்திருப்பர். உண்மையில் எவரும் கயிலையை எடுக்கவேண்டும் என்ற எண்ணத்துக்கே இடம்கொடுத்து இருக்க மாட்டார். இராவணன், எவரும் செய்யக் கூடாத - செய்ய நினைக்கக்கூடாத - செயலைச் செய்ய முன்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/152
Appearance