உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92



3. ஏனாதி நெடுஞ்வண்ணனார் :

பாண்டியர் குடியில் பிறந்தோ, பாண்டியர் படைத் தலைமை பூண்டோ, ஏனாதி பட்டம் பெற்றவர் அரணைச் சூழ உள்ள மதில்கள் எல்லாம் அழிந்துபோக, ஒரே ஒரு மதில் மட்டுமே அழிவுறாதிருக்கும் கோட்டைக்குரிய காவலன் கவலையை ஒரு பாட்டில் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.69 பார்ப்பனர், முருக்க நாரால் ஆன நூலும், தண்டும், கமண்டலமும், உடையவர், உண்ணா நோன்பு மேற்கொள்பவர்; எழுதாக் கிளவியாம் நால்வேதம் கற்றவர் எனப் பார்ப்பனர் ஒழுக்கத்தை அறிந்து உணர்த்தியுள்ளார்.70

4. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி :

இவர் பாடிய பாடல்கள், நற்றிணையில் இரண்டு71 புறத்தில் ஒன்று72, பரிபாடலில் ஒன்று,73 ஆக நான்கு. கடல் வாணிபம் செய்தவர் தமிழர்: கடற்போர் கண்டவர் தமிழரசர். அத்தகைய கடற்மேற் செலவின்போது இவர் உயிரிழக்க நேர்ந்தமையால் போலும் இவர் இப்பெயர்பெற்றார். காதலனைத் தேடிப்போன நெஞ்சம் ஆங்கு அவனைக் காணாமையால் மீண்டு வந்த வழி, நான் கவலையால், உருவே மாறுபடுமளவு மெலிந்து விட்டமையால், என்னை வேறு ஒருத்தியாகக் கருதி எங்கோ போய்விட்டதோ எனத் தலைவி கூறியதாக இவர் பாடியிருக்கும் பாடல் நயம், மகிழத்தக்கது.74 அமிழ்தமே பெரினும், தாமே உண்ணார். யார்மாட்டும்; சினம் கொள்ளார்; ஒருபொழுதும் சோம்பி இரார். அஞ்சத்தக்க பழிபாவங்களுக்கு அஞ்சுவர்.வேண்டு-