உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


இவர் தம் பாக்கள் மூலம் அறியலாம், இவன் வரலாறு பின்வருமாறு;

சிறந்த வில்லாற்றல் வாய்ந்தவன். ஓரியின் வில்லிலிருந்து விரைந்து புறப்படும் அம்பு, தொடக்கத்தில் வேழத்தை வீழ்த்திப் பின்னர், புலியின் உயிரையும், மானின் உயிரையும், காட்டுப் பன்றியின் உயிரையும், போக்கிவிட்டு, இறுதியாக உடும்பின் உடலில் சென்று தைத்துச் செயலற்றுப் போகும்.38 அத்தகு வில்லாற்றலன் ஆகவே தான் வல்லில் ஓரி என அழைக்கப் பெற்றான்.39 மழவர்களை வென்றவன்40 கொல்லி மலைக்கு உரியவன்.41 தம் நாட்டகத்தே உள்ள கொல்லி மலையைப் பிறன் ஒருவன் ஆள்வது பொறாத, சேர வேந்தர் பணிக்க மலைமான் திருமுடிக்காரி, கொல்லி மீது படையெடுத்துச் சென்று, ஓரியைக் கொன்று விட்டுக் கொல்லியைச் சேரலர்க்குக் கொடுத்து விட்டு, அவ்வெற்றிக்களிப்பால், வெற்றி உலா வந்தான்,42 ஓரி சிறந்த கொடையாளி; வறுமை உற்ற போது, வேழங்களின் தந்தங்களை விற்று மக்களை வாழ்விப்பவன்.43

4. காரி

இவனைப் பாடிய புலவர்கள், அம்மூவனார்44 இடைக் கழிநாட்டுநல்லூர் நத்தத்தனார்45 ஒளவையார்46 கபிலர்47 கல்லாடனார்48. கோவூர்கிழார்49 பரணர்;50 பெருஞ் சித்திரனார்51 மாறோக்கத்து நப்பசலையார்52 வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்53 ஆக பதின்மர் ஆவர்.

இப்பாடல்கள் மூலம் இவன் வரலாறாக அறியத் தக்கன; இன்றைய தென்னார்க்காடு மாவட்டத்தில்