48
வேண்டும் விடுதலை
அவ்வரசியல் சட்டங்களைப் பொருளற்றவையாகச் செய்துள்ளன. எனவே பேராயக்கட்சி ஒரு யானையின் அளவிற்கு வலிமை பெற்றாலும் சரியே. அல்லது, ஒரு பூனையின் அளவிற்கு மெலிவுற்றுப் போனாலும் சரியே, நாம் அக்கட்சியின் அஃதாவது அக்கட்சிப் பெரும்பான்மையின் அஃதாவது அக்கட்சியை ஆட்டிப்படைக்கும் வடநாட்டாரின் - இந்திக்காரரின் அடிமைகளே. அந்த அடிமைக் கூட்டத்திற்குத் தலைமை என்று கூறிக் கொண்டு ஓர் அநும பகத்தவத்சலம் போனாலும் சரியே - அல்லது ஒரு வீடண சுப்பிரமணியம் போனாலும் சரியே. அல்லது ஒரு சுக்ரீவக் காமராசு போனாலும் சரியே. வடநாட்டானிடம் நமக்கென்று ஒரு தனிப்பெருமை, இன்றன்று, இனி என்றும் வரப்போவதில்லை. இந்தியாவின் இனத்தை இன்று நேற்றுன்று ஏறத்தாழ மூவாயிரமாண்டுக்காலமாகத் தமிழன் நம்பிப் பார்த்துவிட்டான். அந்த அம்மையினத்தாரின் குருதியில் என்றைக்கும் அழுத்தம் குறைந்ததே இல்லை. அது முன்னேற்றப் பேராயக் கட்சி என்று பேசினாலும் சரி; அல்லது உண்மைச் சமவுடைமைக்கட்சி என்று கூறினாலும் சரி; அல்லது பொதுவுடைமைக்கட்சி என்று கூப்பாடுப் போட்டாலும் சரி; அந்த அம்மையாரின் குரலையும் தமிழர்கள் நம்ப வேண்டியதில்லை. அவரின் எழுத்தையும் தமிழர்கள் ஒப்பவேண்டியதில்லை; அவர் ஒரு முழு ஆரியப் பார்ப்பனத்தி, நம்மைப் பொறுத்தவரை ஆரியப் பார்ப்பானுக்கு இருக்கின்ற இனப்பாங்கைவிட ஆரியப் பார்ப்பனத்திக்கு இருக்கின்ற இனப்பாங்கு இரண்டு மடங்காகவே இருக்கின்றது என்று சொல்லலாம்."பார்ப்பனர்கள் இன்று திருந்திவிட்டனர்; நேற்றுப்போல இல்லை" என்று பேச்சில் பேசலாம்.அல்லது எழுத்தில் எழுதலாம்; ஆனால் பார்ப்பனன் என்றும் திருந்தான். அது நிலவுலகமானாலும் சரி; நிலா உலகமானாலும் சரி. இந்திர பிரம்ம உலகங்கள் ஆனாலும் சரி. அங்குள்ள பார்ப்பனனும் பூணுலைத்தான் போடுவான். பார்ப்பனத்தியும் பார்ப்பானுக்கு மேலாகத்தான் இருப்பாள். அவர்கள் வேலை உட்காய்ச்சல் போன்றது. அவர்களிடம் காமராசரின் அரசியல் தந்திரமும் செல்லாது. கருணாநிதியின் அரசியல் மந்திரமும் ஏறாது. காமராசர் அந்த வகையில் தம் தோல்வியை உணர்ந்து விட்டார். கருணாநிதி உணர்வார். இனி, இந்திராவின் கண்ணாடிக்குக் காமராசரும். கருணாதிதியும், சுப்பிரமணிய, பக்தவத்சலங்களும் இன்னும் யாவரும் கறுப்பாகத்தான் தோன்றுவர். அதில் எள்ளளவும் ஐயப்பாடில்லை. காரணம் இந்தியாவில் நடப்பது முழு அரசியல் அன்று; ஆரியவியல் கலந்த அரசியல்.