காப்பியம் , 5 சமுதாயத்தில் செயற்கை கலந்ததாகவும் ஆகிவிடுகிறது. இயற்கையோடு உறவு பூண்டு வாழ்ந்த ஆதிமனிதனின் வாழ்க்கை காப்பிய நிகழ்ச்சிக்கு ஏற்ற நிலைக்களமாகும். அளவுக்கு மிஞ்சிய செயற்கைச் சட்ட திட்டங்களை மனிதன் ஏற்படுத்திக் கொண்டவுடன் அவன் தனது தனித் தன்மையை (Individuality) இழந்து விடுகிறான். தனித் தன்மை எவ்வளவுக் கெவ்வளவு மிகுதியாகக் காணப் படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு காப்பிய நிகழ்ச்சிக்கு அஃது ஏற்ற இடம் ஆகிறது. காப்பியத்தில் காணப்படும் நிகழ்ச்சிகள் நேரடியாக உணர்ச்சியிலிருந்து பிறப்பவையாக இருக்கவேண்டும். உணர்ச்சியைச் செயலாக்க இன்றைய உலகிலுள்ள தடைகள் அங்கு இருக்கமாட்டா. இயற்கையோடு ஒன்றிய வாழ்வு வாழ்ந்த அவர்கள் உணர்ச்சியை உடனே செயலாக மாற்றினர். கட்டுப்பாடுகள் நம்மைப் போன்று அவர்களைத் தடை செய்ததில்லை. போலி நாகரிகம், புகுந்துள்ள நம் சமூகத்தில் தனி மனிதன் விருப்பம் போல் செய்யும் உரிமையை இழந்துவிட்டான். நாடகத்திற்கும் காப்பியத்திற்கும் உள்ள அடிப்படை வேற்றுமைகள் பல. அவற்றுள் சிறந்த ஒன்றை நாம் மறத்தலாகாது. நாடகத்தில் பாத்திரத்திற்கு உள்ள உரிமை காப்பியத் தலைவனுக்கு இல்லை. நாடகத் தலைவனோ வாழ்க்கையைத் தன் விருப்பம்போல் மாற்றி அமைத்துக்கொள்ளும் உரிமை பெற்றவன். காப்பியத்தலைவன் விதியினால் கட்டுப் பெற்றவன்; விதி செலுத்தும் வழி, அதனை எதிர்த்துச் செல்ல சக்தியற்றுச் செல்கிறவன். காப்பியத் தலைவன் விரும்பினும் விரும்பாவிடினும் அவனது விதி அவனைப் பிடர்பிடித்து உந்துகிறது. அவன் அதற்குக்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/24
Appearance