உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்


நேரே அரசனைச் சென்று பார். அவனும் போர்க்களம் போகும் விருப்புடையவன்தான். எனினும், இரவலர்க்குக் கொடுத்த பின்னரே, அவன் கை வாளையேந்தும். அவன் கையால் நீ ஒரு முறை பரிசு பெற்றால் போதும்-பின்னர் செவிட்டுச் செவியினர் வாயில்களைத் தேடி செல்ல நேராது அத்தகைய பெரும் பொருள் அளிக்கும் அண்ணல் அவன் என்றார் கோவூர் கிழார், இருவரும் சற்று நேரம் பெருமூச்செறிந்து நின்றனர்.

பாணன் மனக்கண் முன் உறையூர் தோன்றியது. அவனது யாழினுக்கு மயங்கும் யானை தெரிந்தது. வீரர் தெரிந்தனர். அரண்மனை தெரிந்தது. அரசன் கை பாணனை நோக்கி நீண்டது. பாணன் கண்கள் பனித்தன. அவன், திடீரென்று தன் முன் நின்ற புலவரைத் தழுவியவாறு அழுதான்.


20. அவரவர் பங்கு!


சேரமான் இரும்பொறையைக் கண்டு பாட இளங்கீரனார் சென்றார். அவன் புலவர் முகத்தைப் பார்த்தான். ஏனோ அவனுக்குக் கபிலர் நினைவு வந்து விட்டது:

தமிழ்ப்புலம் உழுத கபிலன் இன்று இருப்பின் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று தன் ஆற்றாமையை வெளியிட்டான்.

இளங்கீரனார் கூறினார்: அரசே! சிறப்புற்ற பெரியோர் பிறந்த உலகில், சிறப்பற்றோர் வாழோம் என்று சொல்வரோ? சொல்லார் கபிலர் போன்றார்