74
இலக்கிய அமுதம்
வரை படையெடுத்து மீண்டான். வடஇந்தியாவில் இருந்த வச்சிரநாட்டு வேந்தன், அவந்தி நாட்டு அர்சன், மகதநாட்டு மன்னன் என்பவர் இவனை நண்பனுகக் கொண்டனர். இவன் இமயத்தில் புலிக்கொடி பொறித்தான். இவனது காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் சோழநாட்டுத்துறைமுக நகர மாக விளக்கமுற்றிருந்தது. அத்துறைமுகத்தில் அயல் நாட்டுக் கப்பல்கள் வந்து பண்டங்களை இறக்கியும், தமிழ்நாட்டுப் பண்டங்களை ஏற்றியும் சென்றன. துறைமுகத்தில் சுங்கச் சாவடி இருந் தது. மலைநாட்டு மிளகும் பொன்னும் தென்கடலில் பிறந்த முத்தும், கீழ்க்கடலில் பிறந்த பவளமும், காழக (பர்மா) நாட்டுப் பொருள்களும், சீனம் முதலிய இடங்களிலிருந்து வந்த பனிநீர் முதலியன வும், இலங்கைப் பொருள்களும்,மேனுட்டு இயந்திரப் பொறிகள், மது முதலியனவும் சோழநாட்டு இறக்கு மதிப் பொருள்களாக வந்து குவிந்தன. பல நாடுகளிலிருந்து வந்த பல் வேறு மொழிகளைப் பேசும் வணிகர் காவிரிப்பூம்பட்டினத்தில் குடியேறி. யிருந்தனர்.
சங்க காலச் சோழருள் கரிகாலன் சிறந்திருந்த காரணத்தால் அவனைப் பின்வந்த சோழரும் புலவரும் பலபடப் பாராட்டினர்.
இடைக்காலச் சோழர் (கி. பி. 300-900)
ஏறத்தாழக் கி. பி. 300-க்குப் பிறகு தொண்டை நாடு பல்லவர் என்ற புதியவ்ர் ஆட்சிக்கு உட்பட டது. அவர்களாலும் அவர்க்கு முன்னேடிகளாக வந்த களப்பிரராலும் சோழர் ஆட்சி எல்லையில் சுருங்கியது. கி. பி. 300 முதல் கி. பி. 600 வரை கோச்செங்களுன், புகழ்ச் சோழர் போன்ற அரசர் இருந்து பகைவரை ஓரளவு வென்றனர். கோச் செங்களுன் கி. பி. 5-ஆம் நூற்ருண்டின் பிற்பகுதி யில் வாழ்ந்த சோழப் பேரரசனுவான். அவன் காலத் தில் சைவசமயம் சமண பெளத்த சமயங்களால்,