பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

67

குடிக்க விடலாமா, என்பதுபற்றிக் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. எப்படிக் கொடுத்தாலும் குடிக்கத் தொடங்கிய தனத்தில் கொஞ்சமும் பால் எஞ்சா வண்ணம் குடிக்க விடுதலே நல்லது. இவ்வாறு செய்யாமல் குழந்தை ஒவ்வொரு தனத்திலும் பால் எஞ்சிவிடும்படி இரண்டு தனங்களையும் ஒரே தடவையில் குடிக்குமாயின், தாயின் தனங்களில் பால் சுரப்பது குன்றிவிடும்.

தாயிடம், தொடக்கத்தில் சிறிதளவு பாலே உண்டாகுமாயின், குழந்தையை இரண்டு தனங்களிலும் குடிக்கவிட வேண்டியதே. தாயிடம் தொடக்கத்தில் ஒவ்வொரு தனத்தில் பால் அதிகமாக உண்டாகுமாயின், அப்பாலில் சிறிதளவு, கையால் பீச்சி விட்டுப் பின்னர் ஒரு தனத்திலுள்ள பால் முழுவதையும் குடிக்குமாறு செய்ய வேண்டும். எவ்வளவு பால் பீச்சவேண்டும் என்பது இரண்டொரு நாள் பழக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பால் தரும்போது, தாயும் குழந்தையும் வசதியான முறையில் இருந்து கொள்ள வேண்டும். தாய்குழந்தை பெற்ற பின்னர் படுத்திருந்தால், அவள் ஒருபக்கமாகச் சாய்ந்துகொண்டு, குழந்தைக்குப் பால் தரவேண்டும். அப்போது, தாய் குழந்தையை ஒரு தலையணையுடன் சேர்த்துத் தன்னுடன் அணைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், குழந்தை மூச்சுவிடக், கஷ்டப்படுமாறு அதிக நெருக்கமாக அணைத்துவிடலாகாது. நெருக்கமாக அணைத்துவிட்டால், குழந்தை பால் குடிப்பதை விட்டுவிட்டு வாயினால் மூச்சிழுக்கத் தொடங்கிக் காற்றை வாயினால் விழுங்கும், பழக்கமுடையதாகிவிடும். அது வாந்தி உண்டாக்க ஏதுவாகும்.

எல்லோர்க்கும் வயிற்றில் சீரணம் நடைபெறும் போது வாயுக்கள் உண்டாகும். அந்த வாயுக்கள்,