இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
93
ஆனால் பறவைகளோ உனது பெயரை உனது காலை ஒளியில் பாடுகின்றன. காரணம் உனது பெயரே, மகிழ்ச்சி தான்.
-ப.ப.
தலைவனை வரவேற்க முகத்திரையை விலக்கி இன்முகம் காட்டும் மணப்பெண்ணைப் போல, காட்டிலே செல்லும் சாலையின் திருப்பத்தில், இலையுதிர் காலத்து படிஞாயிற்றின் புதுமை என்னைத் தேடி வந்து எனக்குக் காட்சியளித்திருக்கிறது.
உயிர் மட்டுமே தொடக்கூடிய மலரை உடல் எவவாறு தொடமுடியும்? - -தோ
★★★★
விண்ணுக்கு விண் நீரைப் பரவலாகப் பொழிந்து வரும் கோடைக் கொண்டலாக நீ என்னிடம் வருவாய். - -எ
★★★★
நாம் மூச்சுவிடும், ஒவ்வொரு கணமும் இறைவனிடத்தில் நாம் உறைந்துள்ளோம் என்கிற உண்மையை நாம் உணர்வோமாக. - -ஆ
★★★★
முடிவற்ற வாழ்க்கைக்கு இசைப் பாடும் தனது பொன்மயமான இசைக்கருவியை விண்மீன்களின் அமைதிக்கு உவந்தளிக்கிறது பகல் பொழுது. - -மின்
★★★★