82
இலக்கிய அமுதம்
செப்பேடுகளில் எ ழு த ப் பட்டன. சிந்தாமணி, பெரியபுராணம், கம்பராமாயணம் என்ற பெருங் காப்பியங்கள் சோழர் காலத்திற்ருன் தோன்றின. கலிங்கத்துப்பரணி, மூவருலா, ஒட்டக்கூத்தர் நூல் கள், சிவஞானபோதம் முதலிய சித்தாந்த சாத்திரங் கள் நாலாயிர தி வ் வி ய ப் பிரபந்தத்திற்குரிய பேருரைகள் என்பன யாவும் சோழர் காலத்திற்ருன் வெளிப்பட்டன.
வீரசோழியம், ந ன் னு ல், யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கலவிருத்தி முதலிய இலக்கண நூல்களும் இக்காலத்தேதான் எழுந்தன. முதலாம் இராசேந்திரன் பண்டித சோழன் எனப் பாராட்டுப் பெற்றவன். இரண்டாம் குலோத்துங்கன் பெரிய .புராணம் செய்வித்தவன். முதற் குலோத்துங்கன் மீது கலிங்கத்துப்பரணி பாடப்பெற்றது. அவனுக் குப்பின் வந்த விக்ரமசோழன், இரண்டாம் குலோத் துங்கன், இரண்டாம் இராசராசன் இம்மூவரும் ஒட்டக்கூத்தர் மாணவர்கள், இம்மூவர்மீதும் அப் புலவர் பெருமான் உலா'ப்பிரபந்தம் பாடியுள்ளார். மூன்ரும் குலோத்துங்கன் காலத்தில் க ம் ப ராமாயணம் எழுந்தது. இவையன்றிப் பல நாடக நூல்களும் அந்தாதி முதலிய சிறு பிரபந்தங்களும்
செய்யப்பட்டன.
முடிவுரை
இப்பிற்காலச் சோழர்க்கு முற்பட்ட பல்லவர் தமிழரல்லர். ஆதலால் அவாதம் ஆட்சியில் பேரிலக் கியங்கள் தோன்றவில்லை. சங்ககாலச் சோழரும் பிற்காலச் சோழரும் தமிழ் மன்னராதலால், இவ்விரு காலங்களிலும் தமிழ் ஓங்கி வளர இடம் அளித்தனர். பிற்காலச் சோழருக்குப் பின்பு தமிழரசர் ஆட்சி தமிழகத்தில் மறைந் தொழிந்த காரணத்தால், வள மான் இலக்கியங்கள் தோன்ற வழி இல்லாது போய் விட்டது. (இமிழகம் தமிழர் ஆட்சியில் இருந்தாற். ருன் தமிழ் வளம்பெறமுடியும்) என்பதைச் சோழர் வரலாறு மெய்ப்பிக்கின்றது.