பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252


சக்ரதா சபா, குமரகான சபா முதலிய பல சபைகள் இருந்தன. குமரகான சபையைச் சேர்ந்த என். விஸ்வநாதய்யர் பல நாடகங்களை எழுதி நடித்து, அச்சு வடிவிலும் கொண்டு வந்திருந்தார். விஜயவிலாச சபா, சக்ரதர சபா இவற்றுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தோம். இந்தச் சபைகளில் ஆசிரியராகவும் நடிகராகவும் விளங்கினார் சுந்தரராவ். நல்ல எடுப்பான தோற்றம் உடையவர்; கெம்பீரமான குரல் மிகச் சிறந்த நடிகர். உஷா பரிணயம், பிரகலாதன் இரு நாடகங்களை நாங்கள் பார்த்தோம். பிரகலாதனில் இரண்யனாகவும், உஷாபரிணயத்தில் பாணுசூரனாகவும் சுந்தரராவ் அபாரத்திறமையுடன் நடித்தார். அதே நேரத்தில் பேசும் படங்களில் வந்த வற்றல் உருவங்களைப் பார்த்தபோது, ‘இப்பேர்ப்பட்டவரையல்லவா ராட்சத வேடம் போடச் செய்ய வேண்டும்’ என்று நாங்கள் எண்ணிப் பெருமூச்சு விட்டோம்.

சுந்தரராவின் கல்லெண்ணம்

எங்கள் நாடகங்களையும் நடிப்பையும் பார்த்துப் பரவசப் பட்ட சுந்தரராவ் எங்களோடு அன்னியோன்னியமாகப் பழகினார். ஒத்திகைகள் நடைபெறும் போது தாமாகவே வந்து உட்கார்ந்து கொள்வார், வாத்தியார் இல்லாததால் சுந்தரராவே அந்த ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டு, நடிப்புச் சொல்லிக் கொடுப்பார். பெரியண்ணாவுடன் நெருங்கிப் பழகுவது எல்லோராலும் இயலாது. அதுவே ஒரு தனிக் கலை என்றுதான் சொல்ல வேண்டும். சுந்தரராவ் எப்படியோ பெரியண்ணாவைக் கவர்ந்து விட்டார். இருவரும் மிக நெருங்கி உறவாடினார்கள். சுந்தரராவ் இரண்டாவது மகாயுத்தத்தில் சேவை புரிந்தவர், அப்போது கலைக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். சர்க்காரால் அவருக்குக் கொஞ்சம் நிலம் மான்யமாகக் கொடுக்கப் பெற்றிருந்தது. எங்கள் நிலையை நன்குணர்ந்து அனுதாபப்பட்ட சுந்தரராவ் தமது நிலத்தை அடகு வைத்துப் பணம் வாங்கித் தருவதாகவும், நல்ல காட்சி உடைகளைத் தயாரித்து நாடகங்களைச் சிறப்பாக நடத்துமாறும் ஆலோசனை கூறினார். பெரியண்ணா அதற்கு ஒப்பவில்லை. கஷ்டங்கள் முழுவதையும் தாமே ஏற்றுக்கொள்வதாகவும், நண்பர்