பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮬöy தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

எரிபரந்து எடுத்தல்-இருவகைப் படையாளரும் இருவகைப் பகைப்புலத்துப் பரந்துசென்று எரியை எடுத்துச் சுடுதலும்;

இவ்விரண்டற்கும் உம்மை விரிக்க."

இவை கொற்றவள்ளைப் பொருண்மையவேனும் உட்பகுதி

பலவுந் துறையாய் வருதலின், எரிபரந் தெடுத்தற்கும் உதாரண шолти?от.“

வயங்க லெய்திய பெருமையானும்’-ஒருவர் ஒருவர்மேற் செல்லுங்காற் பிறவேந்தர் தத்தந் தானையோடு அவர்க்குத் துணையாயவழி அவர் விளக்கமுற்ற பெருமையும்;

கொடுத்தல் எய்திய கொடைமையானும்-மேற்செல்லும் வேந்தர் தத்தம் படையாளர்க்குப் படைக்கல முதலியன கொடுத் தலும், பரிசிலர்க்கு அளித்தலும் ஆகிய கொடுத்தலைப் பொருந்திய கொடைத்தொழிலும்;

அடுத்து ஊர்ந்து அட்டகொற்றத்தானும்’-எடுத்துச் சென்ற இருபெருவேந்தர் படையாளர் வரவறியாமல் இரவும் பகலும் பல காலும் தாம் ஏறி அந்நாட்டைக் காவல் புரிந்தோரைக் கொன்ற கொற்றமும்,

என்னும் பதிற்றுப்பத்தும்" அழிவு கூறிய இடம் அப்பாற் படும்.

மாராயம் பெற்ற நெடுமொழியானும்-வேந்தனாற் சிறப் பெய்திய அதனாற், றானேயாயினும் பிறரேயாயினுங் கூறும் மீக் கூற்றுச் சொல்லும்;

1. இயங்குபடை யரவமும் எரிபரந்தெடுத்தலும்’ என இரண்டிடத்தும் எண் ணும்மை விரித்துரைக்க என்பதாம்.

2. இங்கு மேற்கோளாகக் காட்டப்பெற்ற புறநானூற்றுப் பாடல்கள் இரண்டும் முழுமையாக நோக்குமிடத்துக் கொற்றவள்ளையென்னுந் துறைப் பொருண்மை அமைந்தன வாயினும் இவற்றின் கண் எல்லுப்படவிட்ட சுடுதி விளக்கத்து’ எனவும் பகைவர் ஊர்சுடுவிளக்கத்து’ எனவும் வரும் தொடர் களைப் பகுத்து நோக்கியவழி இவை எரிபரந்தெடுத்தல்’ என்னுந் துறைக்கு இலக்கியமாயமைதலின் இங்கு உதாரணமாகக் காட்டப்பெற்றன என்பதாம்.

3. வயங்கல்-விளக்கம்; ஈண்டுப் போர்த்துணையாக உடன் வந்தோரால் அரசன் பெற்ற விளக்கத்தினைக் குறித்து நின்றது.

4. அடுத்து ஊர்ந்து அடுதலாவது, இரவும் பகலும் பல காலும் அடுத்தடுத்துப் பகைப்படை மேற்சென்று காவல் வீரர்களைக் கொல்லுதல். கொற்றம்-வெற்றி.

5. பதிற்றுப்புத்துள்' என்றிருத்தல் பொருத்தம். அப்பாற்படும்-அடுத்துார்ந் தட் ட கொற் றத்தின் பாற்படும்,