பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் ፳ 47

உள்ளத்தைத் தொடுவதில்லை. சிந்தையைக் கிளர்வதில்லை; ஆனால், அதைக் காணும் கம்பன் போன்ற கவிஞர்களின் உள்ளத்தில் ஒரு விதத் துரண்டலை உண்டாக்குகின்றது. அவரிடமிருந்து வெளிப்படும் துலங்கல்,

தண்டலை மயில்க ளாடத்

தாமரை விளக்கம் தாங்கக் கொண்டல்கள் முழவின் ஏங்கக்

குவளை கண் விழித்து நோக்கத் தெண்டினர எழினி காட்டத்

தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட

மருதம்வீற் றிருக்கும் மாதோ?” என்ற கவிதையாசு மலர்கின்றது. ஓர் அறை நிறையக் குழுமி யுள்ள முதிர்ந்தோர்கள்: அரசியல்பற்றிக் கலந்து ஆய்ந்து கொண்டிருந்தால், அஃது ஒரு குழந்தையின் அறிவுச் சூழ் நிலைக்குச் சிறிதும் ஒவ்வாது. குழந்தையை நீக்கிவிட்டு, அது வதியும் வீட்டையும் குடும்பத்தையும் ஆராய்வதால் யாதொரு பயனும் இல்லை. குழந்தையை வீட்டில் காணவேண்டும்; அது புரியும் எதிர்வினைகளைக் கவனித்தல்வேண்டும். ஒரே வீட்டில் வதியும் இரு குழவிகள் தேவையான ஒரே வித சூழ்நிலை யைப் பெறுகின்றன என்று சொல்லுதல் இயலாது. இரு குழவி களிடையே காணப்பெறும் தனியாள் வேற்றுமைகளின் அளவிற் கேற்ப, அவர்கள் வாழும் சூழ்நிலையால் அவர்கள் தாக்கம் பெறுவதிலும் அதிக வேற்றுமைகள் உள்ளன. . .

பிறப்பதற்கு முன் முதிர்ச்சி'

ஒரு மரம் பெரிதாக வளர்வதற்கு முன்னர் அதன் விரை தரைக்குள் புலனாகாமல் வளர்கின்றது. தரையின் கீழ் எழுந்த அதன் வாழ்க்கையும் தரையின்மேல் வளர்ந்த அதன் வாழ்க் கையும் ஒரே தொடர்புடையவை, அங்ஙனமே, மக்களிடை யேயும் அவர்களுடைய பிறப்பின் பின் எழுந்து விளங்கும் வாழ்க்கை பிறப்பின்முன் உள்ளடங்கிக் கிடந்த வாழ்க்கையின் தொடர்ச்சியாகும். கரு என்னும் அரும்பு மலர்ந்த நிலையே குழந்தை பிறப்பது. எனவே, கருவுலக வாழ்க்கையை ஆராய்வது இன்றியமையாததாகின்றது. அந்தக் கருவூரிலிருந்

54. கம்பரா.நாட்டுப் படலம்.செய். 4. 55. முதிர்ந்தோர்கள்.Adults. 56. gp@##ĝ-Maturation.