பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுமனும் இராமனும் ேே 333 வருணனைகளில் வாலி தீயவன், கொடுமைக்காரன் என்று சொல்லத்தக்கது எதுவுமில்லை. அன்றியும் சிவபக்தன் எட்டுத் திக்கிலும் சென்று சிவவழிபாடு செய்பவன். வராகம், கூர்மம் முதலியவைகளால் அவனை ஒன்றும் செய்ய முடியாது என்றால், இராமனைப் பொறுத்தவரை குற்றங்குறைகள் இல்லாதவனும், சிவ பக்தனும் முந்தைய அவதாரங்களால் வெல்லப்பட முடியாதவனும் ஆகிய ஒருவன் தனக்குப் பகைவன் என்பது தெளிவாயிற்று. இந்த விளக்கங்களின் இடையே எதிர் வருபவர்களின் பலத்தில் பாதியைப் பெற்று விடுவான் என்று கூறியதே இராமனைச் சிந்திக்க வைத்துவிட்டது. வாலியால் தவறு கண்டாலொழியச் சிவனிடம் அவன் பெற்ற இந்த வரத்தை மீற முடியாது. குரக்கினத்தில் ஒருவன் மனைவி ஒருவனுக்கே உரியவள் என்ற கட்டுப்பாடு இல்லை. ஆகவே, சுக்கிரீவனிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டுமானால் இராமனுக்கு ஒரே வழிதான் உண்டு. வாலியின் எதிரே வராமல் அவன்மேல் அம்பிட்டுக் கொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு இராமன் உடனே வந்து விட்டான். வாலியின் இருப்பிடம் சென்றபொழுது இராமனே சுக்கிரீவனிடம், "நீங்கள் இருவரும் போரிடும் பொழுது வேறொரு இடத்தில் மறைவாக நின்று அம்புதொடுக்க முடிவு செய்துவிட்டேன்” என்ற கருத்தில், 'அவ் இடத்து, இராமன், நீ அழைத்து, வாலி ஆனது ஒர் வெவ் விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை, - வேறுநின்று எவ்விடத் துணிந்து அமைந்தது என் கருத்து இது எனறனன; - கம்ப 3944 என்று இராமன் பேசுகிறான்.