பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盔感登 பரகாலன் பைந்தமிழ்

வாசிவல்லிர் : மிகச் சிறந்த நம் திருமேனியை தித்திய சூரிகள் மட்டிலுமே காணவல்லர்கள். அற்பனான இவன் காணலாகா து என்ற நினைப்போ? சர்வசாதாரண மான திருமேனியை இன்னார்க்குத்தான் காட்டலாம், இன்னார்க்குக் காட்டலாகாது’ என்ற வேறுபாடு கொள்ளலாமோ?

இத்தளுரீர் : நித்தியசூரிகட்குக் காட்சி தரும் வடிவை நித்திய சம்சாரிகட்கும் எல்லாப் பொருள்களை பும் அளிப்பதற்கன்றோ இந்தளூரில் வந்து நிற்பது? வாசிபற முகங்கொடுக்க வந்து நிற்கின்ற இடத்தில் வாசி {வேறுபாடு) வைக்கின்றீரே. வாழ்ந்தேபோம் நீரே; உம்முடைய உடம்பு உம்மை ஆசைப்பட்டவர்கட்காக ஏற்பூட்டது என்று தினைத்திருந்தோம்;அப்படியன்றாகில் உம்முடைய உடம்பை நீரே கண்டு கொண்டு, நீரே தொட்டுக்கொண்டு, நீரே முகர்ந்து கொண்டு, நீரே கட்டிக்கொண்டு நீரே வாழ்ந்துபோம் என்று வெறுப் :புடன் பேசுகின்றார்.

அசித்தும் எம்பெருமானின் திருமேனி என்ற இஆண்டய இந்த ஆழ்வார் வீணாக வருந்துகின்றார்

இந்தளூர்ப் பெருமான் திருவுள்ளம் பற்றியிருப்ப o கொண்டு ஆழ்வார் பேசுகின்றார்: "தி எம்பெரு மான், நீர் எம்பெருமான், திசையும் இரு நிலனும் எம்பெருமான்' என்ற சாத்திரப் பொருள் அடியேனுக்குத் தெரியாமல் இல்லை. சங்கும் சக்கரமும் புன்முறுவல் கொண்ட முகமும் திகழும் திவ்விய மங்கள விக்கிர கத்தைக் கண்டு களிக்கப் பேரவாக் கொண்டிருக்கும் அடியேனுக்கு ஜகத் சொரூபனாக இருக்கும் இருப்பு என்ன பயன் அளிக்கும்? அடியேன் போன்றோர் கண்டு களிக்க அன்றோ இந்தளுரில் வந்திருப்பது? நீர் பரவாசுதேவ னாக இருக்கும் இருப்பு நித்தியசூரிகளின் அநுபவத்திற் காக. வியூக நிலை நான்முகன் முதலானோரின் கூக்'