பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o {} g வடவேங்கடமும் திருவேங்கடமும் என்ற நம்மாழ்வாரின் பாசுரம் இக் கருத்திற்கு அரண் செய்வதாக அமைகின்றது. அழகு கொழிக்கும் இடங் களில்தான் ஆண்டவன் கோயில் கொண்டு எழுந்தருள் வான் என்பதற்குத் திருமலை ஒரு பெரிய சான்றாகும். கார்காலம் நிறைவு பெற்று முன்பனிக் காலத்தில் திரு மலையைச் சேவித்தால் இந்த அழகை-இயற்கை எழிலைக் கண்டு கணிக்கலாம். நாம் ஊனக் கண்ணால் காணும் காட்சிகளையே கவிஞர்கள் இரசவாதம் செய்து நம் மனக்கண்ணுக்கு அற்புதமாக காட்டுவர். அலாவுத்தீன் என்ற சிறுவனை மந்திரவாதி ஒருவர் மந்திர விளக்கைக் கொண்டு பல அற்புதமான காட்சிகளைக் காணச் செய்த தாகக் கதைகளில் படித்துள்ளோம். "திவ்விய கவி' என்று போற்றப்பெறும் பிள்ளைப் பெருமாள் அய்யங் கார் நம்மைத் திருமலைக்கு இட்டுச் சென்று இத்தகைய காட்சிகளைக் காட்டுகின்றார். என்கண்ணை மறந்துன் இரு கண்களையே என்னகத்தில் இசைத்துக் கொண்டு நின்கண்ணால் புவியெல்லாம் நீயெனவே தான்கண்டு நிறைவு கொண்டு -பா. க. கோவிந்தன் பாட்டு-3 என்று பாரதியாருக்குக் கோவிந்தன் பிரபஞ்சத்தைக் காட்டி தானே இப்பிரபஞ்சம் என்று உணர்த்துவது போலவே, பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் தம்முடைய 'கவித்துவம் என்ற மந்திர ஆற்றலால் நாம் ஊனக் கண்ணால் காணும் காட்சிகளையே நம் மனக்கண்ணுக்கு வேறு விதமாகத் தோன்றச் செய்து நம்மை மகிழ்விக் கின்றார். இனி, அவர் காட்டும் காட்சிகளை ஒவ்வொன் றாகக் காண்போம். வேங்கடமலை விண்ணோருக்கும் மண்ணோருக்கும் எளிதில் அடையக் கூடியவாறு அமைந்துள்ளது என்று