பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா-டு எடு

ஈண்டும் உம்மை தொக்கது. (இதில் அமர்' என்பது அமர் புரிபவருக்கு ஆகுபெயர்; வட வாரியரொடு வண்டமிழ் மயக் சத்து’ எனும் காட்சிக் காதை யடியினுள், வடதிசை மருங்கின் மன்னவ ரெல்லாம், தென்தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என: என்னும் கால்கோட் காதையடியிலும், தமிழ்தலை மயங்கிய தலை யாலங்கானம்' எனவரும் குடபுலவியனார் புறப்பாட்டடி யிலும், கொண்டடி மிகைபடத் தண்டமிழ் செறித்து’ எனும் கபிலரின் 7-ஆம் பத்தின் 3-ஆம் பாட்டு அடியிலும் தமிழ்’ என்பது தமிழ்ப் படைக்கு ஆகுபெயராய் நிற்பதுபோல, ஈண்டு அவரென் பது தானைப் பொருநரைச் சுட்டுதல் வெளிப் படை.

ஆரமர் ஒட்டல் எனப் பொதுப்பட நிற்றலால், நிரை கொண் டார் மீட்கவரும் மறவரை ஒட்டுதலும், மீட்பவர் நிரை கவர்ந்த வரை வென்றோட்டலுமாகிய இரண்டனையும் இத்தொடர் குறிக்குமெனப் பிறர் உரை கூறினர். நிரை கொள்ளும் வெட்சி மறவர் மீட்போரை வென்றழிக்கும் பரிசெல்லாம் முன் வெட்சி வகை ஆகோளின் துறைகளினுள் அடங்கக் கூறுதலானும், அதை விலக்கிக் கரந்தை முதலிய பிறவகை வெட்சித்துறைகளே இதிற் கூறவேண்டுதலானும், இதையடுத்த துறை கவரப்பட்ட நிரையை மீட்டுத் தருதலாதலின் கொண்டோரை வென்றன்றி ஆபெயர்த் துத் தருதல் கூடாமையாலும், ஈண்டு, ஆரமர் ஓட் டல் ஆகோள் மறவர் வென்றி குறியாது அவரை வென்றோட்டும் கரந்தைப் பொருநரையே குறிப்பதொருதலை. அன்றியும் ஆரமரோட்டல்: முதல் நெடுமொழி தன்னொடு புணர்த்தல் வரை குறிக்கப்படும் துறையனைத்தும் அனைக்குரி மரபினது கரந்தை எனத் தெளிக் கப்படுதலானும் இது கரந்தைத் துறையே யாம்)

(10) ஆபெயர்த்துத் தருதலும்-பகைவர் கவர்ந்த நிரை யைக் காவலர் கரந்தை சூடிப் பொருது மீட்டுத் தருதலும்:

(அமரோட்டலும் ஆபெயர்த்தலும் நிரைமீட்கும் கரந்தைப் பொருநர் வினையாதலானும், கவர்ந்த மறவரை வென்று ஒட்டி னாலொழிய நிரை மீட்டல் கூடாமையானும் இவையிரண்டும காரண காரிய முறையில் ஒன்றை ஒன்று தொடர்ந்து நிகழும் பெற்றியவாகும்.

அ. ந்தை நீடிய வறிந்துமாறு செருவி ற் பல்லாண் இன நிசை த இய வில்லோர்க்