4 ஆங்கிலேயரது இடையீடும் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தொடங்கியது. பிரஞ்சுக்காரரும் தஞ்சைத் தரணியின் ஆட்சியில் தலையிட்டனர். கி. பி. 1759இல் காரைக்கால் பிரெஞ்சுக்காரருக்கு உரியதாயிற்று. கி.பி.1749இல் ஆங்கிலேயர் தஞ்சை மன்னர்க்குரிய தேவிக்கோட்டையைத் தமக்கு உரியதாக ஆக்கிக்கொண்டனர். எப்பொழுதும் நவாபு, மராட்டிய அரசர் தமக்கு அடங்கியவர் ' என்றும், ' அவர்கள் தமக்குக் கப்பம் கட்டிவர வேண்டும் ' என்றும் வற்புறுத்தி வந்தார். பெரும்போர்கள் நிகழ்ந்தன. அப்போர்களுக்குப் பெரும் பொருள் வேண்டி வந்தது. ஆகவே கிழக்கிந்தியக் கம்பெனியுடன் மூன்று தடவை துளஜாவும், அவர்க்குப் பின் அமர்சிங்கும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அவ்வொப்பந் தங்களின்படி பல லக்ஷம் வராகன் கும்பினியாருக்குக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மராட்டிய மன்னர்கள் குடி மக்களிடத்தில் எவ்வளவு வசூல் செய்ய முடியுமோ அவ்வளவும் வசூல் செய்தார்கள். நவாபும் 1773 முதல் ஏறத்தாழ மூன்றாண்டுகள் நாட்டைக் கைப்பற்றியிருந்தார். அந்நாட்களில் குடிமக்களை எவ்வளவு கசக்கிப் பிழிய முடியுமோ அவ்வளவும் செய்து வசூல் நடைபெற்றது. பிரதாபசிங்கர் காலத்தில் 57 லக்ஷம் வசூல் ஆகியிருக்க, நவாபு காலத்தில் 81 லக்ஷம் வசூல் செய்யப்பெற்றதெனின், வசூலின் கொடுமை அளவு தெரியவரும். இது இரண்டாம் துளஜா காலத்தில் நடந்தது. நவாபின் ஆட்சி நீங்கித் துளஜா மீண்டும் அரசு எய்தியபோதிலும் பிறிதொரு தொல்லை வந்தது. அதுவே ஹைதர் படையெடுப்பு. 1781இல் ஏறத்தாழ ஆறு திங்கள்கள் தஞ்சைத்தரணி ஹைதர் அலியின் ஆட்சியில் இருந்தது. அப்பொழுது குடிமக்கள் அடைந்த இன்னல்கட்கு அளவில்லை. பஞ்சம் ஒருபுறம் நாட்டிலும் விளைவு குறைவு 1780இல் 10,489,057 கலம் விளைவு ; 1781இல் 1,578,220 கலம் விளைவு ; எனில் மக்கள் எவ்வளவு அல்லல் உற்றிருப்பர் என்பதை ஊகிக்கலாம். ஹைதர் படையெடுப்பின் விளைவால் பல ஏக்கர் நிலங்களும் பயிரிடப்படாதொழிந்தன ; நீர்ப்பாசன வசதிகளும் அழிக்கப்பட்டன. எனவே மக்கள் பலரும் நாட்டை விட்டு ஓடினர். மேலும் பாவா பண்டிட் என்பார் செய்த நிலச் சீர்திருத்தத்தின்படி கடுமையான வசூல் : பின்னர் 1782இல் திப்புவின் படையெடுப்பு. திப்பு ஆங்கிலப் படையைத் தோல்வியுறச் செய்து மாயூரம் சீர்காழிப் பகுதிகளைக் கொள்ளை யிட்டார். இங்ங்னம் துளஜாவின் காலத்தில் மக்கள் தொல்லையுற்றனர். துளஜாவும் ஆங்கிலேயருடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களால் ஆங்கிலேயப் படைகள் தஞ்சையில் நிறுத்தப்பட்டன. மராட்டிய மன்னர் சேனைகள் இல்லாத வெறும் அரசராகி விட்டனர். இரண்டாம் துளஜா தனக்குப்பின் அரசராகச் சரபோஜியைச் சுவீகாரம் எடுத்துக்கொண்டார். துளஜாவின் தம்பி அமர்சிங்கு, சரபோஜியின் பாதுகாவலர் என்ற முறையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார் நாளடைவில் தாமே அரசர் ஆனார் ; இதனை உறுதிப்படுத்திக்கொள்ள அந்நாளைய கவர்னர்
பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/14
Appearance