பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/726

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698 பதினெண் புராணங்கள் அவர்கள் முறையே தேவர்கள், அசுரர்கள், பிதுர்க்கள், மனிதர்கள். தேவர்கள் பகலிலும், அசுரர்கள் இரவிலும் மிகுதியான பலத்தைப் பெறுவர். இந்த நால்வகை தவிர ராட்சசர்கள், யக்கூடிர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், அனைத்து விலங்குகளையும் படைத்தார். பிரம்மனின் நான்கு வாய்களில் இருந்தும், நான்கு வேதங்கள் சொல்லப்பட்டன. மானசீக புத்திரர்கள், சுவயம்பு மனு ஆகியோரின் படைப்பு அடுத்து பேசப்படுகிறது. தட்சன் மகளாகிய வினதாவின் மகனாகத் தோன்றியவனே கருடன். இவனே கருடபுராணத்தை இயற்றியவன். கருட புராணம் விஷ்ணு, லட்சுமி, சூரியன் ஆகிய மூவரையும் வழிபடும் முறைகளையும், அவரவர்களை வழிபடும் போது சொல்லவேண்டிய மந்திரங்களையும் விரிவாகப் பேசுகிறது. விஷ்ணுவுக்கு வாசுதேவா, வாமன பாலபத்ராய, பார்ஜன்ய முதலிய ஆயிரம் நாமங்களைப் பேசுகிறது. பாம்புக்கடியை நிவர்த்திக்க பிரானேஷ்வரா என்ற மந்திரம் பாம்புக்கடியிலிருந்து ஒருவரை மீட்க உதவுகிறது. ஆனாலும் இதற்குச் சில விதிவிலக்குகள் உள்ளன. எந்த இடத்தில் இருந்து பாம்பு கடித்தது என்பதும், உடம்பில் எந்த உறுப்பில் கடித்தது என்பதும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். ஆறு, சுடுகாடு, கரையான் புற்று, மலை, மரப்பொந்து, கிணறு என்ற இடங்களில் இருக்கும் பாம்பு கடித்தால் இம்மந்திரம் பயன்படாது. மனித உறுப்புக்களில் கை கஷ்கம், இடுப்பு, தொண்டை, நெற்றி, காது, வயிறு, வாய், கைகள், முதுகு ஆகிய இடுப்புக்கு மேலே இருக்கும் பகுதிகளில் பாம்பு கடித்தால் இம்மந்திரம் பயன்படாது.