%. மராட்டிய அரச குடும்பத்துக்குச் சொந்தமான குடும்பங்கள் தஞ்சை மராட்டியர் ஆட்சியெங்கணும் பரவி வாழ்ந்தனர். மராட்டியர் அரசியலிலும் பெரிய அலுவல்களில் மராட்டிய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். இந்த அரசியல் அலுவலர்களில் சிலர் அப்பா அல்லது அண்ணா என்று குறிக்கப்பட்டவர்களும் உண்டு. இவர்கள் செல்வாக்குள்ளவர்கள் ; ஆனால் சிறு பிரிவினர் ஆவர். மேலே கண்ட அரசகுடும்பத்தவர் - அரச குடும்பத்தைச் சார்ந்தவர்அரசரால் சேர்த்துக்கொள்ளப்பட்ட மாதரார், இவர்களுக்கெல்லாம் பணிவிடை செய்யப் பணிமகளிர் கூட்டம் பெருகியது. அவர்கள் அக்காமார் என்று கூறப்பட்டனர். மராட்டிய மன்னர்கள் மகாராஷ்டிரத்தில் இருந்து பிராமணர்களையும் பிராமணர் அல்லாதாரையும் குடியேற்றினர். அப்பிராமணர்களைத் தேசஸ்த பிராமணர்கள் என்று குறிப்பிடுவதுண்டு. அவர்களுக்குச் சுரோத்திரியம் இனம் முதலியன கொடுத்து மராட்டிய மன்ன்ர் ஆதரித்தனர். தேசஸ்த பிராம ண ர்கள் அல்லாது இந்நாட்டிலேயே இருந்த பிராமணர்கள் - வேதம் வல்லவர்கள் பலர் அரசின் ஆதரவு பெற்று வாழ்ந்தனர். அவர்கள் பெற்ற அறக்கொடைகள் பல. அவர்கள் செய்த யாகங்களும் பல. அரசர்களும் தெய்வநம்பிக்கையுடையவர்களாய்ச் சமய ஒழுக்கங்கள் உடையவர்களாய் இருந்தமையாலும், அரசமாதேவிகளும் சமயச்சார்பான ஒழுக்கம் உடையராய் விரதங்கள் பண்டிகைகள் ஆகியவற்றை இடைவிடாது நடத்திவந்தமையாலும் அரண்மனையில் பிராமண-புரோகிதர் கூட்டம் பெருகியது. அவர்களுக்குத் தகூடினைகள்-பொருட்கொடை அளித்தம்ையோடு சிறந்த உணவும் பல குறிப்பிட்ட நாட்களில் அளிக்கப்பெற்றன ; உலுப்பைகளும் தரப்பெற்றன. அந்தணர்கட்கும் யாத்திரை செய்பவர்க்கும் அன்னம் பாலித்தற் காக அமைந்த சத்திரங்களும் பல ஆயின. எனவே மராட்டியர் அரசில் அரசகுடும்பத்தவரும், அவர்களைச் சார்ந்த குடும்பத்தவர்களும், பெரிய அதிகாரிகளும், கல்விவல்ல பிராமணர்களும், வைதீகச் சடங்குகளைச் செய்துவந்த புரோகிதர்களும் செல்வவளம் பொருந்தி வாழ்ந்தனர் என்பது சொல்லாமே அமையும். நல்ல அழகுள்ள பெண்கள் பலர் தேவதாசிகளாக இருந்தனர். அவர்கள் இசை நடனம் நாட்டியம் இவற்றுள் வல்லவராக இருந்தபோதிலும், பதியிலார் ஆகவும் பரத்தையராகவும் இருந்தமையின், சமுதாயத்துப் பெருமைக்குப் பெருங்குறையை உண்டாக்கினர் என்னலாம். m
பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/17
Appearance