உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்தான் அந்த ஹாஸ்ய நடிகர்-கோமாளி ராமண்ணு! ஒகோ, உங்களுக்குத் தெரியாதோ அவரை ?... - அந்தக் காலத்தில் அவர் பெயரைத் தெரியாதவர்களே யாரும் கிடையாது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னல் நாடக உலகில் பெரும் புகழுடன் விளங்கிய நடிகர் அவர் கோமாளி ராமண்ணு மேடையில் தோன்றுகிருர் என்ருல் போதும் ! கூட்டம் சொல்லி முடியாது. சுற்று வட்டாரங்களிலிருந்தெல்லாம் ஜனங்கள் கட்டுச் சாத மூட்டையுடன் நாடகம் பார்ப்பதற்கு வந்துவிடுவார்கள். ராமண்ணு கோமாளியாக மேடையில் தோன்றி, ஒரு தடவை கண்களைச் சிமிட்டித் தலையை இப்படியும் அப் படியும் ஆட்ட வேண்டியதுதான்! கொட்டகையில் சிரிப்பு அலே குளுகுளுவென்று பரவும். ராமண்ணு, கால் ஆர் மோனிய வாத்தியக்காரரின் பக்கத்தில் போய் நின்று கொண்டு, -