உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36 என்ன தம்பி சொன்னாய்? அந்தக் கொக்கு பேசாமல் அமைதியாக இருக்கின்றதென்றா நினைக்கிறாய். பார்த்துக் கொண்டே இரு தெரியும்.” ஏன் அண்ணா கரையோரத்தில் எவ்வளவு மீன்கள் ஒடிக்கொண்டே இருக்கின்றன. இதோ பாருங்கள். ஏன் அந்தக் கொக்கு குத்திக் குத்திப் பிடித்துத் தின்னலாமே!’ சரி, நீ சொல்லுவது இருக்கட்டும். அந்தக் கொக்கு நிற்கின்ற போக்கு எப்படி இருக்கிறது சொல். நன்றாகக் கவனித்துப் பார்த்துச் சொல் தம்பி!’ அதுவா அண்ணா! நன்றாக உற்றுக் கவனித்துவிட் டேன். ஒன்றுமே தெரியாதது போல நின்றுகொண்டிருக் கிறது. அதுமட்டுமல்ல அண்ணா. உயிரில்லாதது போலக் கூட காணப்படுகின்றதே!’ அதுதான் சரி தம்பி! செத்துப்போன கொக்கு மாதி ரியே காணப்படுகிறது பார்த்தாயா? அதுதான் அதனுடைய புத்திசாலித்தனம். எதிரிகள் அந்தக் கொக்கைப் பார்த்துப் பயப்படவேமாட்டார்கள். அலட்சியமாகக்கூட நினைத்து விடுவார்கள். சிறிது நேரத்திற்குள் என்ன நடக்கிறது பார், தம்பி!' ஆ1 என்ன அண்ணா! நீங்கள் சொன்னது சரியாகவே ஆகிவிட்டதே! இப்போது, பட் டென்று தண்ணிரில் கொத்தி ஒரு மீனைப் பிடித்து உள்ளே செலுத்திவிட்டதே! "இன்னும், பார், தம்பி இப்போது எப்படி நிற்கிறது அந்தக் கொக்கு? - - முன்பு நின்றது மாதிரிதான் இருக்கிறது. ஒன்றுமே அறியாததுபோலவும் உயிர்கூட இல்லாதது போலவும் சிலை மாதிரி நின்றவண்ணம் இருக்கிறது.” - - தம்பி! இந்தக் கொக்கினைப் பார்த்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது எவ்வளவு இருக்கின்றது தெரியுமா?