உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35

வரும் தம்பி கரையோரமாக பெரிய மீன்கள் அடிக்கடி வராது. எப்போதாவதுதான் வரும். பார்த்துக் கொண்டே இரு, பெரிய மீனும் வந்து போகும்.” "நாம் பிடிக்க முடியுமா அண்ணா, இந்த மீன்களை." பிடிக்கவே முடியாது. அதற்கு ரொம்பவும் சாமர்த் தியம் வேண்டும் ,' "அது எப்படி யண்ணா முடியும்? மீன்களை வலை போட்டுத்தானே பிடிப்பார்கள்.” 'மீன் பிடிப்பதற்குப் பல வழிகள் இருக்கின்றன. மீன் பிடிக்கிற வேடிக்கை ஒன்று நடக்கிறது. நான் பார்த்துவிட் டேன். நீ பார்க்கவில்லையே!” எங்கே யண்ணா அந்த வேடிக்கை நடக்கிறது. எனக்குக் காட்டமாட்டீர்களா?” - 'உனக்கு அந்த வேடிக்கையைக் காட்டத்தான் போகி றேன். அந்த வேடிக்கையான நிகழ்ச்சியிலிருந்து உனக்கு மிகவும் நல்ல செய்தி சொல்லப்போகிறேன். அதோ தெரி கிறதே பச்சைப்பசேலென்று, அங்கே பார்!’ ஆமாம் அண்ணா! உயரமாகப் பச்சைப் புல் வளர்ந் திருக்கின்றது. புல் காடு மாதிரி தெரிகிறதே.’ அதைத்தான் தம்பி கோரை என்று சொல்லுவார்கள்! அந்தக் கோரைப் புல் பக்கமாக ஆடாமல் அசையாமல் என்ன நிற்கிறது பார்!’ "ஆமாம் அண்ணா! வெள்ளையாக ஏதோ பொம்மை மாதிரி நின்றுகொண்டிருக்கிறதே!' பொம்மை இல்லை தம்பி உயிர் உள்ளதுதான். அதுதான் கொக்கு. உனக்குத் தெரியாதா?’ தெரியும் அண்ணா ஆற்றோரத்தில் கொக்குகள் மீன் பிடிக்கும் என்று படித்திருக்கிறேன். இந்தக் கொக்கு, பேசா மல் நிற்கிறதே! "