பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

34 1ஆம் அண்ணா ஆற்றில் தண்ணீர் வேகமாகத்தான் ஒடும். ஆகையால் நாமும் வேகமாகத் தானே போக வேண்டும்.' 'தம்பி! இதுதான் ஆறு!’ அதுதான், பார்த்தாலே தெரிகிறதே அண்ணா!' "சரி, ஆற்றங்கரை ஓரமாகவே நடக்கலாமா தம்பி? வேண்டாம் அண்ணா! எனக்குக் கால் வலிக்கிறது. இந்த மணலைப் பார்த்தால் அழகாக இருக்கிறது. இந்த மணல் மேட்டின்மீது உட்கார்ந்து பார்க்கலாம்.” 'சரி தம்பி! உன் விருப்பப்படியே செய். நானும் உட்கார்ந்துகொள்ளுகிறேன்.” . "அதோ, தண்ணிரில் பறவைகள் தெரிகின்றன. அவை கள் என்ன அண்ணா!' அவைகள் பறவைகள்தான். சந்தேகமே இல்லை. தண்ணீரில் இருப்பது உனக்கு வியப்பாக இருக்கின்றதோ! அவைகளுக்கு நீர்ப் பறவைகள் என்று பெயர்.” 'ஒகோ! நீர்ப் பறவைகள் வேறு இருக்கின்றதோ! இப்போதுதான் அண்ணா பார்க்கிறேன்.”

  • தம்பி! தண்ணிர் சலசலவென்று கரையோரமாகப் போகிறதே! அங்கே பார் வேடிக்கையை'

அடடா! வேடிக்கைதான் அண்ணா! சின்ன சின்ன மீன்கள் கும்பல் கும்பலாக - சாரை சாரையாக ஓடுவது எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள் அண்ணா!' நான் எத்தனையோ தடவை பார்த்திருக்கின்றேன். நீ பார்த்துக்கொண்டிரு தம்பி!” "ஏன் அண்ணா, எல்லாம் சின்ன மீன்களாகவே வரு கின்றன. பெரிய மீன்கள் வராதா?’.