உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

3

"என்ன, தம்பி, அவர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக் கிறார்கள்? * 'அண்ணா, நிறைய பறித்து மடியில் வைத்திருக்கிறார் கள். எல்லாம் சின்னதும் பெரிசுமான மாங்காய்கள்! கடித்துக் கடித்துத் தின்னுகிறார்கள். அவர்கள் முகங்க ளைப் பார்த்தால் மாங்காய்கள் புளிப்பதுபோல் தோன்று கிறது!’ என்னப்பா தம்பி! இது கூடவா தெரியாது! மாங்காய் புளிக்கத்தானே செய்யும் ! காய்கள் எப்போதுமே நன்றாக இருக்காதே! சாப்பிடவும் நன்றாக இருக்காது. உடம்புக்குக் கேடு உண்டாகும். வயிற்று வலிகூட வரும். தொண்டை யில்கூட வலி ஏற்பட்டுவிடும். இன்னும் எத்தனையோ தீங்கு கள் உண்டாகுமே!’ "ஏன் அண்ணா, அவர்கள் காய்களைத் தின்னுகிறார்கள்? பழங்களைப் பறித்துச் சாப்பிடலாமே!’ பழங்கள் இருப்பதும் அவர்கட்குத் தெரியாதா தம்பி! தெரியும். கெட்ட பழக்கம்தான் காரணம். காயைத் தின்று கெட்ட பழக்கத்தை வளர்க்கின்றார்கள். காய்களில் இனி மையும் இல்லை. பழங்கள் எவ்வளவு இனிமையாக இருக் கும் தெரியுமா?" ஏன் அண்ணா தெரியாது! நன்றாகக் கேட்டீர்கள்! எங்கள் பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்திலேயே பழக்கடை இருக்கிறது. அடிக்கடி நான் சாப்பிடுவது ஆயிற்றே! பழங் கள் எவ்வளவு சுவையாக இருக்கும்!" 'இப்போதுதான், உனக்கு ஒரு...” தெரியும் அண்ணா! ஒரு குறட்பா சொல்லப்போகிறீர் கள்! சொல்லுங்கள், எழுதிக்கொள்ளுகிறேன்.” 'இவ்வளவு சீக்கிரமாகவா சொல்லிவிடுவேன்! உனக்கு நன்றாக, விளங்கும்படியாக இன்னும் நீதிகளைச் சொல்லி,