பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

2

தம்பி! உன்னைவிட நான் பெரியவயிைற்றே! எனக்கா, அதற்குள்ளாக கால் வலிக்கும்! கால் வலிக்கவில்லை; இங்கே ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதற்காகத்தான் உட்கார்ந் தேன். நீயும் உட்காரு.”

அண்ணு! ஏதோ குறட்பா சொல்லப்போகிறீர்கள் என்று தெரிகிறது. நேற்றும், இப்படித்தான் எதை எதையோ பார்ப்பதுபோலவே நல்ல நல்ல குறட்பாக் களைச் சொல்லித்தந்தீர்கள். ஆம் அண்ணா, இந்தத் தோப்பில் என்ன இருக்கிறது? தம்பி! என்ன அப்படிக் கேட்டுவிட்டாய்! என்ன இருக்கிறதென்று! அதோ பார், அந்த இரண்டு பையன் களும் என்ன செய்கிறார்களென்று தெரிகிறதா? அதை உனக்குக் காட்டுவதற்காகத் தான் இங்கே உட்கார்ந்தேன்." அண்ணா இதைப் பார்க்கவா உட்கார்ந்திர்கள் இது என்ன அதிசயமாகவா இருக்கிறது உங்களுக்கு!” ஆம், தம்பி! எனக்கு வியப்பாகத் தான் இருக்கின்றது." . என்ன அண்ணா வியப்பு! இரண்டு பையன்களும் மரத் தின் கிளைமீது உட்கார்ந்துகொண்டார்கள். ஏதோ சாப் பிட்டுக்கோண்டு இருக்கிறார்கள்.”

தம்பி! அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் தெரியுமா? இதோ ஒரு வினாடியில் வந்துவிடுகிறேன் அண்ணா! இங்கேயே இருங்கள்.” х

(என்று கூறிவிட்டு தம்பி ஓடிச்சென்று திரும்பு கிறான்.) - . தம்பி! போய்ப் பார்த்துவிட்டு வந்தாயா? ஆம் அண்ணா, பார்த்துவிட்டு மட்டும் வரவில்லை; அவர்களைக் கேட்டுவிட்டும் வந்தேன். எனக்கும் கொடுக் கிறேன் என்றார்கள். வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன் அண்ணா.”