இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அண்ணனும் தம்பியும் - 1 காயா ? கனியா? 'தம்பி! நேற்று எத்தனைக் குறட்பாக்கள் படித்தாய்? எல்லாம் நினைவில் இருக்கின்றதா?” அண்ணா! பத்துக் குறட்பாக்கள் தானே சொல்லித் தந்தாய். அத்தனையும் படித்துவிட்டேனே!" 'தம்பி! இன்றைக்கு வேறு குறட்பாக்கள் சொல்லித் தரட்டுமா ?” ஆம் அண்ணா! இன்றைக்கு நிறைய குறட்பாக்கள் சொல்லித் தரவேண்டும். நேற்று மத்யானமே வீட்டிற்குத் திரும்பிவிட்டோம். இன்று மாலை வரை நமது கிராமம் முழுவதும் சுற்றுப் பக்கங்களிலெல்லாம் நீங்கள் அழைத்துப் போகவேண்டும். அப்போதுதான் அதிகமாகச் சொல்லு வீர்கள் .” 'தம்பி உனக்கு இவ்வளவு ஆர்வம் வந்துவிட்டதே! சரி, வா புறப்படுவோம்!” சரி, அண்ணா!' (புறப்பட்டுச் செல்கியூர்கள். ஒ. அண்ணன் எதையோ கவனித்துவிட்( விடுகிறான்.) "ஏன் அண்ணா இங்கே உட்கார்ந்துவி வலிக்கின்றதா?”