உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

107

கேள்வி ஞானம் - வாழ்க்கையின் நோக்கம் - எண்ணி பதை அடையும் வழிகள் - என்பன போன்ற நற்பெருங் கருத்துக்களை ஒருவாறு குறித்துக்காட்டிப் பேசினோம். அடுத்து மகளிர் வாழ்க்கை என்னும் செய்திபற்றிய சில உண்மைகளை விளக்கிப் பேசுவோம். மகளிர்-பெண்கள்-என்று பேச வருங்கால் பொது வாகப் பெண்கள் உலகம் என்று வைத்துக் கொண்டாலும் குறிப்பாக வாழ்க்கைத் துணைவியர்களாக இருந்து நல் வாழ்க்கை நடத்தும் பெண்களைப்பற்றியே ஆராய்ந்தறிதல் வேண்டும். - உலக வாழ்க்கையின் முழுதான நிலை இல்லறத்திலேயே தான் அமைந்து கிடக்கின்றது. இருவரும் - ஆணும் பெண் ணும்-ஒன்றுபட்டு நடத்தும் வாழ்க்கையினை மேற்கொண்ட பின்னர்தான் உலக வாழ்க்கையின் உண்மையும் இனிது விளங்குவதாகும். அறிவும்-அன்பும்போல ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கைதான் இயற்கை வாழ்க்கையு மாகும். வாழ்க்கைத் துணை யென்றே இல்லற மேன்மையில் அவர் களைப் போற்றுதல் வேண்டும். இருக்க இடமில்லாமல் வாழும் மக்கள் உலகில் எங்குமே இருக்க முடியாதல்லவா இடமின்றிக் கண்ட இடத்தில் உறங்குவதும் களைப்பாறி இருப்பதுமான வாழ்க்கையினை நடத்துபவைகளைத்தான் விலங்குகள் என்கிறோம். அதுவே போன்றுதான், ஆண்கள் இருந்து வாழும் இன்ப இடம் போன்றவர்கள் - இல்லம் என்றே உயர்த்திப் பேச