பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிதிறனும் தனியாள் வேற்றுமைகளும் 3.05

அறிதிறன் ஈவின் மாறாமையை அறுதியிடும் கூறுகள்: அறி திறன் ஈவின் மாறாமையை விளக்க இரண்டு தற்காலிகக் கொள்கையை நிறுவி ஆராயலாம்.

(i) அறிதிறன் ஈவு தனியாளின் சூழ்நிலைத் தன்மையைப் பொறுத்தது; சூழ்நிலை மாறாதவரை அறிதிறன் ஈவு மாறாது.

(ii) அறிதிறன் ஈவு தனியாளின் குடிவழியைப் பொறுத்தது; பிறந்தபின் குடிவழி மாற முடியாதாதலின், அறிதிறன் ஈவு மாறுவதில்லை.

முதற் கொள்கை ஆராய்ச்சி: இதில் சூழ்நிலையை மாற்றிக் குடிவழிக் கூறுகளை மாறாது. அமைக்கவேண்டும். இதற்கு ஒரு கரு இரட்டைக்குழவிகளைப் பிறந்ததிலிருந்து பிரித்துப் பலவகை யான வளர்ச்சி விடுதிகளில் வைத்து ஆராயவேண்டும். இதில் அவ்விரட்டையரின் சூழ்நிலைத் தன்மையில் ஒப்புத்தொடர்பு காண முடியாது. ஆகையால் சூழ்நிலை மாறி குடிவழி மாறாது இருக்கும்.

போதுமான கால இடையீட்டிற்குப் பிறகு அக்குழவிகளைப் பல உளவியல் சோதனைகட்கும் அளவைகட்கும் உட்படுத்த வேண்டும். அவர்கள் பெறும் மதிப்பெண்களிலிருந்து அறிதிறன் ஈவுகளைக் கணக்கிட்டு இரண்டையும் ஒப்பிடுதல் வேண்டும். அறிதிறன் ஈவுகளிடையே உள்ள வேற்றுமை, சூழ்நிலையின் வன்மையால் ஏற்பட்டவை. சில ஆராய்ச்சிகளில் சிறிய வேற்றுமையே தோன்றுகின்றது. ஆனால், மேற்கொள்ளப் வெற்ற ஆறு ஆராய்ச்சிகளில் ஒன்றில் மட்டிலும் 13 புள்ளிகள்' வரை வேற்றுமை காணப்பட்டது. இவ்வாராய்ச்சியிலிருந்து சூழ்நிலையால் அறிதிறன் ஈவை ஒரளவு மாற்ற முடிந்த போதிலும், சூழ்நிலையின் எத்தகைய மாறுபாட்டாலும் பாதிக்காதபடி குடிவழி அறிதிறன் ஈவிற்கு ஒருமை அளிக்கிற தென்று தெரிகின்றது.

இரண்டாவது கொள்கை ஆராய்ச்சி : இதில் சூழ்நிலையை மாறாமல் வைத்துக் குடிவழி நிலையை மட்டிலும் மாறும்படி செய்தல் வேண்டும். உண்மைக் குழந்தை, வளர்ப்புக் குழந்தை' ஒப்பு முறையில் மேற்கொள்ளப் பெற்ற ஆராய்ச்சியிலிருந்து, இந்த முடிவுகள் பெறப்பட்டன. பொதுக் குடிவழி, பொதுச் சூழ்நிலையின்றியே ஒன்றுபட்ட அறிதிறன் ஈவு அளிக்க உதவு கின்றது. பொதுக்குடிவழியும் பொதுச்சூழ்நிலையும் சேர்ந்தால்

20. 52(5 &@ Quri tool-3, G5 possir-Identical twins. 21. Lairoflásir-Points. 22. Guam fi'l-Iš (5p;#sng-Foster child, த, உ.கோ.20