பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கூ0 歴一五@

பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயின் தோன்றிய இருவகை விடையும் பரிசில் பெற்ற பின்னரும் அவன் கொடுத்த மிக்கவளனை ஏத்தி வழக்கின்கண் தோன்றிய இருவகை விடையும். அவையாவன, தான் போதல்வேண்டும் எனக் கூறுதலும் அரசன் விடுப்பப் போதலும்.

'இருவகை விடையும் என்றதனால், பரிசில் பெற்றவழிக் கூறுதலும் பெயர்ந்த வழிக் கூறுதலும் ஆம்.

அச்சமும் உவகையும் எச்சம் இன்றி நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் காலம் கண்ணிய ஒம்படை அச்சமும் உவகையும் ஒழிவு இன்றி நாளானும் புள்ளானும் பிற நிமித்தத்தா னும் காலத்தைக் குறித்த ஒம்படையும்.

அச்சமாவது, தீமை வரும் என்று அஞ்சுதல், உவகையாவது நன்மை வரும் என்று மகிழ்தல். நாளாவது, நன்னாள் தீநாள். புள்ளாவன, ஆந்தை முதலியன. பிற நிமித்தமாவன, அலகு முதலாயின. காலங் கண்ணுதலாவது, வருங்காலங் குறித்தல்.

உதாரணம் 'ஆடியல் அழற்குட்டத்து' (புறம்-2.2.கூ) என்பது பிறவாறு நிமித்தம் கண்டு அஞ்சியது.

& &

-- * ● ● * 8. ● 母 诊 岛 &as: 9蜗@

புதுப்புள் வரினும் பழம்புள் போகினும் விதுப்புறல் அறியா ஏமக் காப்பினை அனையை ஆகல் மாறே

மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே” (புறம் 2.0) என்பது புள்பற்றி வந்தது.

“காலனுங் காலம் பார்க்கும்’ (புறம்-சக)

என்னும் புறப்பாட்டு, நிமித்தம் பற்றி வந்தது.

'நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்' (புறம்-ககூடு)

என்பது ஒம்படை பற்றி வந்தது.

உளப்படஞாலத்து வரும் நடக்கையது குறிப்பின் காலம் மூன்றொடு கண்ணிய வருமே.இவை உளப்படத் தோன்றும் வழக் கினது கருத்தினானே காலம் மூன்றனொடும் பொருந்தக் கருது மாற்றான் வரும் மேற்கூறி வருகின்ற பாடாண்திணை. (r.0)

இரண்டாவது புறத்திணை இயல் முற்றிற்று.