பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

நச்சர் :

in-O

இதுவும் அது.

(இபள்) தாவில் கிடந்தோர்க்கு நல்லிசை கருதிய சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்-தமது வலியாலே பாசறைக்கண் ஒரு மனக்கவற்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தலைக் கருதிய சூதர் அத்துயிலெடுப்பின் ஏத்தின துயி லெடை நிலையும்;

"கிடந்தோர்க்கெனப் பன்மை கூறவே, அவர் துயிலெடுப்புத் தொன்று தொட்டு வருமென்பது உஞ், சூதர் மாகதர் வேதாளிகர் வந்திகர் முதலாயினோருட்’ சூதரே இங்ங்னம் வீரத்தால் துயின்றாரைத் துயிலெடுப்புவரென்பது உம், யாண்டும் முன் னுள்ளோரையும் பிறரையும் கூறப்படுமென்பது உங் கொள்க. அவர் அங்ானந்துயின்றமை பிறர்க்கும் புலப்படப் புகழல் அவர் கருத்தாகலின் ஒருதலைக் காமம் உளதாயிற்று.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் பெற்ற பெரு வளம் பெறா அர்க்கு அறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்-ஆடன்மாந்தரும் பாடற்பாணரும் கருவிப் பொருநரும் இவருட் பெண்பாலாகிய விறலியுமென்னும் நாற்பாலாருந் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச்சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும்:

கூத்தராயிற் பாரசவரும் வேளாளரும் பிறரும் அவ்வாடற் றொழிற்கு உரியோர்களும் பாரதிவிருத்தியும் விலக்கியற் கூத்துங் கான கக்கூத்துங் கழாய்க் கூத்தும்" ஆடுபவராகச் சாதி வரையறை யிலராகவின் அவரை முன்வைத்தார்; பாணரும் பொருநருந் தத்தஞ் சாதியில் திரியாது வருதலிற் சேரவைத்தார்; முற்கூறிய

1. தாவில்கொள்கை என்றாற் போலத் தாவில் நல்திசை என ஒரு தொகைப்பட நின்றதனைப் பிரித்துத் தாவில் கிடந்தோர்க்கு எனக் கொண்டு கூட்டிப் பொருள் கூறுதல் நூலாசிரியர் கருத்துக்கு முரணாகும்.

2. சூதர் நின்றேத்துவார்

மாகதர்-இருந்தேத்துவார் வேதாளிகள்-வை தாளியாடுவார்; பலவகைத் தாளத்தில் ஆடல்

நிகழ்த்துவோர்.

வந்திகர்-இசைப்பாடலாற் புகழ்ந்து போற்றுபவர். 3. பாரசவுர்-ஆடற்றொழிற்குரியோராகிய ஓரினத்தார். பாரதிவிருந்தி யாவது, கூத்தன் தலைவனாக நடன் நடி பொருளாகக் காட்டியும் உரைத்தும் வருவது என்பர். இயைந்து-இசை வளர்ப்போர்.