பக்கம்:தாய்லாந்து.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரயில்பாதை அமைக்கப் பல மாதங்களாயின. குறுக்கே ஏறத்தாழ எண்பது பாலங்களைக் கட்ட வேண்டியதாயிற்று.

எங்கள் முகாமைச் சுற்றிப் பாதுகாப்பு வேலிகள் ஏதுமில்லை. இருந்தாலும் எங்களால் தப்பியோட முடியாது. எங்களுக்குத் தரப்பட்ட சாப்பாடு படுமோசம். காலராவும், மலேரியாவும் எங்களைப் பற்றிக் கொண்டன. எங்களில் ஆஸ்திரேலியர்கள், ஆங்கிலேயர்கள், அமெரிக்கர்கள், டச்சுக்காரர்கள் எனப் பல்வேறு நாட்டினரும் இருந்தோம். வியாதி வந்தால் மருந்து மாத்திரை ஏதும் கிடையாது. ஒருநாளைக்குப் பதினாறு மணி நேரம் கடும் உழைப்பு. விடுமுறை என்ற சொல்லுக்கே விடுமுறை தந்துவிட்டார்கள்.

என்னுடைய ஜப்பானிய நண்பர் ஒருவர் எப்போதாவது உப்புடன் கலந்த மீன்துண்டுகளைக் கொஞ்சம் தருவார். அவை தான் என் உயிரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன.

1943 ஆகஸ்டில் ரயில்பாதை முடிவுற்றதும் நாங்கள் காஞ்ச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/28&oldid=1075113" இலிருந்து மீள்விக்கப்பட்டது