பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32


கருகின. தீ மெல்ல மெல்லப் பரவி முயல் குட்டி இருக்கும் இடம் வரை இருந்த புல் அனைத்தும் நெருப்பில் கருகிச் சாம்பலாய்ப் போயின.

“வேண்டும்! வேண்டும்! புல்லே! என் மூக்கையறுத்தாய் அல்லவா! உன் கூட்டத்தோடு ஒழிந்தாய்” என்று முயல் குட்டி கும்மாளம் போட்டது.

சிறிது நேரத்தில் முயல்குட்டிக்குப் பசி எடுத்தது.

“ஐயோ! ஒரு புல் கூட இல்லாமல் எரிந்து போயிற்றே! எதைத் தின்பேன்!” என்று முயல்குட்டி கவலை கொள்ளத் தொடங்கியது.

அதற்கு அழுகை அழுகையாக வந்தது. ஆராயாமல் தான் இட்ட சாபத்தால் அத்தனை புல்லும் கருகிப் போய் விட்டதே என்று தன் மீதே குறைப்பட்டுக் கொண்டது.

புல் அறுத்துவிட்ட தன் மூக்கு எப்படியிருக்கிறதென்று தன் முன்னங் காலால் தடவிப் பார்த்தது. அது ஆறிக் காய்ந்து போயிருந்தது.

“சற்றுநேரம் ஏற்பட்ட வலிக்காக அவ்வளவு புல்லும் எரிந்து போகச் சாபம் கொடுத்தேனே நான் ஒரு முட்டாள்!” என்று கத்திக் கொண்டே தலையை ஆட்டியது.

தூக்கம் கலைந்து கண் விழித்தது. அதைச் சுற்றிலும் எந்தப் புல்லும் கருகவில்லை. பாறையின்