சுெ.சமுத்திரம் فاستسرع / 25 கொடுத்து, அந்தப் பெண்களைச் சுட்டிக் காட்டினார். மீண்டும் அந்தப் பெண்கள் திட்டித் தீர்த்தார்கள். 'பாழாய்ப் போற பயலுவ தாயா பிள்ளையாய் இருக்கிற நம்மள கூட பிரிச்சிடுவாங்க போலிருக்கே. ஊரு உலகத்துல ஒரு டாக்டராலயும் சுகப்படுத்த முடியாத நம்ம பிள்ளைய நோயும் நொடியும் இந்த மசூதியில் வந்துதான் சுகமானது. எந்த நொறுங்குவானோ அயோத்தியில் போயி மசூதிய இடிச்சிருக்கான் பாரு...ஏலா... ராசாத்தி எந்த இடத்தில இடிச்சாளாம்...' சம்சுதீன் தடுமாறினான். அபிராமி தனக்காக காத்திருப்பாளே என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஆனாலும் அந்த மசூதி இடிபாட்டில் அவள் காத்திருத்தல், அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அவள் கிடக்கிறாள். சம்சுதீன், இப்போது, அபிராமியை பார்க்கப் போவது இல்லை என்று தீர்மானித்தான். அதே சமயம் அந்த ஜகாத் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வதா, அல்லது வீட்டில் போய் முடங்கிக் கொள்வதா, என்றும் புரியாமல் தலையைப் பி ய்த்துக் கொண்டிருந்தான். மசூதிக்கு வெளியே வந்த அமீர் தொலைவில் வேக வேகமாய் போய்க் கொண்டிந்த இஸ்லாமியக் கூட்டத்தை வெறித்துப் பார்த்தார். இனி மேல் தன்னால் செய்யக் கூடியது ஏதுமில்லை என்பது போல் தவித்துப் பார்த்தார். அவர் பக்கமாக வந்த காதர்பாட்சா தோளிலும், முத்துக்குமார் தோளிலும் ஆதரவு தேடி இரண்டு கைகளைப் போட்டபடியே அவலமாகப் பேசினார். 'இந்து மதம் எரிமலையாய் வெடிச்சதுனால, இஸ்லாமும் பூகம்பமாகக் குலுங்குதே. இந்த பூகம்பத்துக்கும் அந்த எரிமலைக்கும் இடையிலே எத்தன பேர் சாகப் போறாங்களோ? எத்தன பெண்கள்..."
பக்கம்:மூட்டம்.pdf/27
Appearance