என்ற மாமரத்தின் கிளைகளிலும், அடிவாரத்திலும், மரங்கொத்திகள் ஏறி அமர்ந்து, கொத்திக் கொத்தி கிளைகளுக்குள்ளும், அடிமரத்திலும், சுரங்கம் போட்டிருக்கின்றன… மாமரம் கையறு நிலையில் கதியற்று புலம்பித் தவிக்கிறது.
தமிழ் மக்கள் ஏன் இப்படி ஆனார்கள்…?
தெய்வத் தாயின் திருவுருவ ஓவியத்தில் கையில் இருந்து குங்குமம் கொட்டுகிறது… தலைவர்கள் போற்றித் திருவகவல் பாடுகிறார்கள்… இப்படி தமிழ் மக்கள் அவலம் பற்றி உருவகமாக சித்தரிக்கும் இக்கதைகள் தமிழன் இப்படி ஏன் தாழ்ந்தான், என்ற கேள்வியையும் எழுப்புகின்றன. வீரம், வெற்றிக் களிப்பாகத் தொடங்கி, பிறகு ஆணவமாக, ஆர்பாட்டமாக மாறி, இதன் மூலம், வெற்று ஆரவாரமாகி, இறுதியில் மனிதாபிமானம் அற்று, தன் பலவீனத்தைத் தானே காண இயலாமல் போய், தமிழர்கள் ஆழ்ந்து போயிருக்கிறார்கள் என்று சமுத்திரம் சித்தரிக்கிறார்…
தமிழ் மக்களின் அவலம் என்ற உணர்வை, நமக்குள் பதிக்கும், ஐந்து கதைகளை மையப்படுத்தி, இந்தத் தொகுப்பை வாசிக்கும் போது, இந்த தொகுப்பில் உள்ள பிற ஏழு கதைகளும், இதே தளத்தில் வந்து விடுகின்றன என்பதைக் கவனத்தோடும், தமிழ் மக்களின் அவலம் பற்றிய கரிசனத்தோடும், வாசிக்கும் நண்பர்கள் உணர முடியும். இத்தொகுப்பின் தனித் தன்மை என இப்பண்பை நாம் வெகுவாகப் பாராட்ட முடியும்.
சிறப்பாக விழாக் கொண்டாடுவதன் மூலம், ஊர்ப் பணத்தை நாசப்படுத்துகிறார்கள் காடசாமி, மாடசாமி என்பவர்கள். நீதிக்காக போராடும் பழனிச்சாமி, கடல்மணி போன்றவர்கள் நடுத் தெருவில் தவிக்கிறார்கள், சாகிறார்கள். வாச்சாத்தியின் அவலக் கதையை காமக் கதையாக, திரைப்படக் கலைஞன் மாற்றுகிறான். தமிழ் மக்களின் மேன்மையை நெஞ்சில் நிறுத்திய தமிழ் எழுத்தாளன் மனம் வேகிறான். ரேசன் கடையின் ஊழலைத் தட்டிக் கேட்க, போர்க் குணத்தோடு கிளம்பும் பெண்கள், திரைப்பட நாயகர்கள் பற்றிய கிசுகிசுப்பில் மானம் இழந்து, போர்க் குணம் மறந்து, எளிமைப்பட்டு மயங்கிக் கிடக்கிறார்கள்.
இப்படிப்பட்ட கதைகளின் மத்தியில், வித்தியாசமான கதை, “ஏகலைவனைத் தேடி”, ஏகலைவனின் கட்டை விரலை