உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலர் 45 வண்மையை உடையவன் பாரி, அவனது நாடு முன்பு, மெல்லிய தினையாகிய புதுவருவாயை உடையது; வேங்கை மரங்களை உடையது; கதி ரினது அடியும் தலையும் ஒழியாமல் மிகக் காய்க் கும் பயிர்களை வயலிடங்களில் உடையது. வரகு அதிகமாக விளைவதும் அவரைக் கொடிகள் அதிக மாக உள்ளதுமாகிய இந்நாடு இனிக் கெடும் போலும்” என்று நாட்டையும் பாரியையும். நினைந்து மனம் வருந்திப் புலம்பி அழுதார். கபிலரும் பாரிமகளிரும் , பாரி இறந்தவுடன் கபிலரும் இறந்திருப்பார். ஆயின், பாரி, தான் இறக்கும்போது அவரை அங்ங்னம் செய்யக் கூடாதெனக் கேட்டுக் கொண். டனன். அதுவன்றி, பாரியின் மகளிரும் தம் மாணவிகளுமான இரு பெண்களையும் காப் பாற்றுவார் இன்மையாலும் கபிலர் உயிருடன் இருக்க நேர்ந்தது. அப்பெண்மணிகட்குத் தக்க அறிவும் பெருமையும் உடைய மன்னரைத் தேட நினைந்து அவர்களை அழைத்துக்கொண்டு பறம்பு நாட்டை விட்டுப் புறப்பட்டார் புலவர்; அவ்வாறு புறப்படும்போது பாரியை நினைந்து புலம்பினார்; அவனது வள்ளன்மையை நினைந்து வருந்தினார்; பறம்பு அரணைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கண்ணிர் ஆறாய்ப் பெருக, ஆற்றொனாத் துய ரால் உள்ளத்தினின்றும் பொங்கி எழுந்த அன் புட்ைப் பாடல்களால் பாரியையும் பறம்பு