உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

சமுத்திரக் கதைகள்


முளைகளில் கட்டப்பட்ட மூன்று மாடுகளின் வால்களை துக்கிப் பிடித்து கீழே பார்த்துவிட்டு, அங்கிருந்தபடியே, தனது கண்டுபிடிப்பை பிரகடனப்படுத்தி, ஏமான்களின் கால்களுக்கு நங்கூரம் பாய்ச்சினான்.

“எசமானரே! இந்த கள்ளச்செறுக்கி... பசுமாடு வச்சிருக்கா. ஈனசாதிக, பசுமாடு வளக்கப்படாதுன்னு தெரிஞ்சும், இந்த கிழட்டு முண்ட நல்ல பசுவா... காராமணி பசுவா வச்சிருக்கா பாருங்க.”

மணியம் கச்சேரிக்கும், வலிய கணக்கிற்கும் கண்கள் சிவந்தன. பற்கள் கடித்தன. கிழவி பசுமாடு வளர்க்கிறாள் என்பதைவிட, அவள், தங்களை முட்டாளாக்கி விட்டாள் என்கிற கோபம். போதாக்குறைக்கு தங்களை இவர்கள் புத்திசாலிகளாய் நினைத்துக் கொண்டதால் அவர்களின் கோபம் முட்டாள் தனமாகவும், முரட்டுத் தனமாகவும் வெளிப்பட்டது.

மணியம் கச்சேரியின் கண்ணசைப்பில்

 வலிய கணக்கெழுத்தின் கையசைப்பில், நான்கு ஏவலாட்கள் அந்த பசுமாட்டையும், அதை வளர்த்ததற்கு பிராயச்சித்தமாக (அபராதமாக) இரண்டு மாடுகளையும், ஒரு கன்றுக்குட்டியையும் இழுத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். முட்டப்போன மாடுகளை சவுக்கால் வழிப்படுத்தினார்கள். பின்னர் அதே சவுக்கை வைத்துக் கொண்டு, வலியக் கணக்கெழுத்தின் கண்சிமிட்டலில், ஒரு ஏவலாளி, பூமாரி கிழவியின் 
உடம்பிற்கு ரத்தக்கோடுகளைப் போட்டான் இன்னொருத்தன் கணுக்கணுவாய் புடைத்திருந்த பிரம்பால் அவள் தலையை குத்தினான். இடுப்பை இடித்தான். பூமாரி சுருண்டு வீழ்ந்தாள். அம்மா என்று அழப்போனவளின் வாயில் ஒரு குத்துக் குத்திய பிரம்பு, ரத்தச் சிதறல்களோடு வெளிப்பட்டது. பூமாரி, உருண்டு சுருண்டு கிடந்தபோது.

எதிர்ப்பக்க குடிசையின் பனம்பலகை கதவு வாசலை பிய்த்துக் கொண்டு மல்லாக்க விழுந்தது. ரவிக்கைக்காரி ஆங்காளியாய் வெளிப்பட்டாள். வேகவேகமாய் நடந்து, கிழே கிடந்த மாமியார் பக்கமாய் குனிந்தபோது, ஒரு ஏவலாளியின் பிரம்பு அவள் கழுத்தை நிமிட்டி நிற்க வைத்தது. மாமியார் முக்கி முனங்கி, எழுந்திருக்க