20 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் நிலைமையைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என் னோட வீட்டு நிலைமையை நான் சொல்லியாகனும். நானும் ஒன்னை மாதிரி கஷ்டப்பட்டவன்தான். கிராமத்துல இருந்து ஓடிவந்து, ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்து அப்புறம் படிப்படியாய், முன்னுக்கு வந்தவன். இப்போ எனக்கு ஒரு சினிமா தியேட்டர் இருக்குது. இவ்வளவு பெரிய வீடு இருக்குது; அம்பத்துரர்ல ஒரு சின்ன பேக்டரி இருக்குது; பாலவாக்கத்துல நூறு கிரவுன்ட் இடம் இருக்குது; தேனாம்பேட்டையில் பெரிய அரிசி மண்டி இருக்கு: பேங்க் லாக்கர்ல பானுவுக்கு நூறு பவுன் நகை, இருக்குது; இதையெல்லாம் கணக்குப் பார்த்து செட்டில் செய்து உயில் எழுதிட்டேன். இந்த வீடு, அம்பத்துரர் பேக்டரி, நூறுபவுன் நகை பானுவுக்கு. அரிசி மண்டி, நூறு கிரவுண்ட் மனை, ரியல் எஸ்டேட், கார் பேங்க்ல இருக்கிற கேஷ் என்னோட மகனுக்கு...' பானு குறுக்கிட்டாள். இப்போ இந்த பேச்செல்லாம் எதுக்குப்பா...'
- நீ சும்மா இரும்மா தாய் பிள்ளையாய் இருந்தாலும் வாயும் வயிறும் வேறம்மா. இந்த உயில் விவரத்தை இப்போ தான் சொல்றேன். ஒனக்கும்:ஒன் அண்ணனுக்கும் செட்டில் பண்ணிட்டேன். ஒண்ணாய் இருக்கணுமா...தனியாய் இருக்கணுமா...என்கிறதை நீங்க. என் காலத்துக்குப் பிறகு (yatg-6\! செய்துகொள்ளலாம். பானு நீகூட யோசிக்கலாம்: நான் ஏன் இவ்வளவு அவசரப்பட்டேன்னா, என உடம்புல ஹையர் டென்ஷன் டயபடிக்ஸ்; ஒனக்கு ஒரு வழி செய்யனு மேன்னுதான் உயிர் ஓடிட்டு இருக்குது. இப்பவோ நாளை யோன்னு...”
அப்பா...அப்பா..." ...பொறும்மா... எனக்கு நீங்க கிடைச்சதுல ரொம்ப திருப்தி. நான் சொத்தை செட்டில்;செய்திட்டாலும் இந்த சொத்தும், வீடும் பிரியாமல் இருக்கனுமுன்னுதான் விரும்பு