கட்டுப்பட்டால் 2: 5 சுட்டேன். ஆனாலும், நீங்க என்மேல் இவ்வளவு அன்பு காட்டும்போது நான் என்னைப்பற்றி சொல்லாவிட்டால் அது பெரிய துரோகம். நான் வேற ஜாதிக்காரன்தான்: இப்போ சொல்லுங்க... ஒங்களுக்கு பானுவைக் கொடுக்கச் சம்மதமுன்னா, உட்காரச் சொல்லுங்க, உட்காருறேன்... இல்லேன்னா, போறேன் !' எல்லோரும் மெளன முகமாகிறார்கள். ஆயிரம் மரபு களை உதறினாலும், ஜாதியை உதறமுடியாத தணிகாசலம் நிலைக்குத்திய கண்களோடு மெளனம் சாதித்தார். உயில் விவகாரம் இருக்கும் வரை, ஜாதி விவகாரம் இருக்கட்டும் என்பதுபோல், பாஸ்கரன் தம்பதி ஊமையானார்கள். பானுதான் படபடத்து அவன் முன்னால் வந்தாள். உட்காருங்க... உட்காருங்க...' என்று கத்தினாள். அப்பா, அவரை உட்காரச் சொல்லுங்க. அண்ணி, அவரை இருக்கச் சொல்லுங்க! அண்ணா ஆஸ்கிம் டு சிட்' என்று ஆவேசக் குரலில் அச்சப்பட்டது போலவும், அச்சுறுத் துவது போலவும் கூவினாள். தணிகாசலம், தன்பாட்டுக்கு உட்கார்ந்திருந்தார். பாஸ்கரன், அவனை அங்கே இல்லாததுபோல் பாவித்தான். மைதிலி பானு கொஞ்சம் அடக்கமாய் பேசு’’ என்று எச்சரித்தாள். செல்வம், அந்த அறையையும், அதன் வாசி களையும் கண்களால் சுற்றிப் பார்த்தான், பிறகு மெளன. மாய், வேகமாய் வெளியேறினான். 3 செல்வம், தனித்திருந்தான். பத்து நாட்களில் முகத்தில் ரோமக் கணைகள். அம்புக்குறிகளாய் நின்றன. அலுவலகத்திற்கு, பானு பல தடவை டெலிபோன் செ ய்
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/35
Appearance