உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii என்று சொல்லி ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றைப் பரிசளித்தார். "ஜில் ஜில்" பத்திரிகையில் ஓவியர் ரெஸ்ாக்கின் படத்துடன் அட்டைப் படத்திலே இந்தத் துணுக்கு பிரசுரமானது. பிரசுரித் தவர் ஜில்ஜில் திருநாவுக்கரசு-இன்றைய வானதி திருநாவுக் 5卯母。 இன்றைக்கு நான் மீண்டும் எழுத முயலுகிறேன் என்றால், சில ஆண்டுகள் முன்பு வரை எழுதினேன் என்றால் என் இரத்தத்திலே, சிந்தையிலே வான தியார் தந்த எழுச்சி ஊக்கம் தான் காரணம் நண்பரை சந்தித்ததிலே துவக்கி வழிகாட்டி வானதியாரை நினைப்பதிலேயே இதை முடிக்கிறேன். தந்தையின் அடிச்சுவட்டில் தனயனும் ஈடுபட்டு இந் நாவலை வெளியிடும் கங்கை பதிப்பக அதிபர் திரு. இராம நாதன் அவர்களைப் பாராட்டுகிறேன். சமுத்திரத்தின் கதைகளைப் படிப்பது மட்டும் போதாது சமுதாயக் கொடுமைகளைச் சாடிட, அலைகடலின் அலை களாய் ஆர்ப்பரித்து எழுங்கள். ஏய்ப்பர்களையும் மேய்ப்பர் களையும் எரித்து சாம்பலாக்கும் எரிமலைகளாய் குமுறி எழுங்கள். ‘பாதகம் செய்தோரைக் கண்டால் பயங் கொள்ளலாகாதுமோதி கிதித்திடுவோம் அவர்கள் முகத்தில் உமிழ்ந்திடுவோம்’ என்று அமரகவி நமக்காகவே பாடினான். வீறு கொண்டு எழுங்கள்-புதிய விடுதலைப் போரைத் துவக்குங்கள்! ஆனால் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு! அன்பன் ஜி. இலட்சுமிநாராயணன் (தேசிய முழக்கம்-கரிகாலன்)