இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தென்னாட்டு மாமணியே!
திராவிடனே! இளம்புலியே!
சிறுத்தை ஏறே !
உன்னாட்டைத் திராவிடத்தை
ஒப்பில்லாத் தமிழ்நாட்டைத்
தாய கத்தைத்
தின்னவந்த பகைநொறுக்கி
இருள்கிழித்துச் செங்கதிரோன்
கிழக்கில் வந்தான்!
என்னென்பேன்! பொன்! பொன்! பொன்!
இளம்பரிதி வாழ்க! தமிழ்ப்
பொங்கல் வாழ்க!
1
இன்றுவந்த புதியகல்வி
முதலமைச்சர் கைச்சரக்கு;
விளைவைக் கண்டார் ;
பொன்றாத செயலிதுவாம்!
படைபலத்தாற் புவியாட்சி
நிலைத்த துண்டோ?
இன்றுதமிழ்த் தைப்பொங்கல்;
திராவிடரின் தனித்திருநாள்!
இந்நன் னாளில்
நன்றில்லாத் திட்டங்கள்
எதுவரினும் நாமெதிர்ப்போம் :
உறுதி கொள்ளே!
2
34