உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் பரம்பரை அதற்கு ஆதரவு கொடுப்பார்கள். ஏதோ இளைஞர்கள் கூடி வேடிக்கையாக அமிர்த பஜார் பத்திரிகையை ஆரம்பித்த போதிலும், புகழ்பெற்ற தலைவராகிய ஆனந்த மோகன் போஸ், பிரபல வக்கீலான கிஷோரிலால் சார்க்கர் முதலியோர் அதற்குக் கட்டுரைகள் எழுதி உதவினர்கள். ஆசியாவின் ஆஸ்தான கவி' என்று புகழ் பெற்ற நம் கவியரசர் ரவிந்திரநாத தாகூர் முதல் முதல் எழுதிய பாட்டு அதில்தான் வெளிவந்தது. அப் பொழுது தாகூருக்கு வயது 14. ஸிஸிர் குமார் பத்திரி கைக்கு எழுதுவதோடு நில்லாமல், தாமே எழுத்துக் கோத்து, காமே அச்சிட்டும் வந்தார். இந்த வேலைகள் போதா என்று, நாளடைவில் அச்சு மை கூட்டுவதையும் கற்றுக்கொண்டு தாமே தயாரித்து வந்தாராம். சமயங் களில் பக்கத்து ஊர்களுக்குப் போய், கையில்ை செய்த காகிதங்களும் வாங்கிக்கொண்டு வருவாராம். இப்படித் தயாரிக்கப்பெற்ற அமிர்த பஜார்’, மகாத்மா காந்தியின் ஹரிஜன் நவஜீவன் பத்திரிகைகளைக் காட்டிலும் சுத்த சுதேசிச் சரக்கு என்று சொல்லலாம்! அமிர்த பஜார் வங்காளி பாஷையில் வாரப் பத்திரிகையாக நடத்தப்பட்டு வந்தது என்பது மிக முக்கியமான விஷயம். அமிர்த பஜார் தோன் றிய வருஷத்திலேயே சென்னையில் மெட்ராஸ் மெயில் ' என்ற ஆங்கிலப் பத்திரிகையும் ஆரம்பமாயிற்று. அமிர்த பஜார் இந்தியா இந்தியர்களுக்கே உரியது என்று, ஆரம்பம் முதல் தேசியப் பிரசாரம் செய்து வந்தது. வங்காளத்துக் குழந்தைகள், அதல்ை அறிவு பெற்று, தே ச ட க் தி

  • 65 9
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/70&oldid=855545" இலிருந்து மீள்விக்கப்பட்டது