உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் பணத்திலே கலியாணம், அதிலே கொஞ்சம் வான வேடிக்கையும் நடத்த வேண்டும் என்பது போல், ரூபாய் 300 ல் அச்சு இயந்திரம், ஈய எழுத்துக்கள், கடுதாசி எல்லாமே வாங்கிவிட வேண்டும் என்று சொல்லி, அவர் தம்முடைய தம்பி லிஸிர் குமாரைக் கல்கத்தாவுக்கு அனுப்பி வைத்தார். ஸிஸிர் புறப்பட்ட பொழுது, எந்தக் காகம் வலமாயிற்ருே, எந்தச் சுமங்கலி எதிரே வந்தாளோ, தெரியவில்லை. அந்த நாள் நம் தேசத்திற்கு ஒரு கன்னுள் ஆயிற்று. வீரமும் உண்மையும் கொண்ட கோஷ் சகோ தரர்களின் அரிய ஊழியத் தி ைல் பிற்காலத்தில் எத்தனையோ மக்களுக்கு நன்மை உண்டாயிற்று. கல்கத் தாவில் இருந்து வலிலிர், மரத்தினல் செய்யப்பட்ட ஒரு பழைய அச்சு யந்திரத்தையும், அடித்துத் தேய்ந்துபோன கொஞ்சம் எழுத்துக்களையும் வாங்கி வந்தார். முதலில், அமிர்தப் பிரவாஹினி ' என்று ஒரு பத்திரிகையை அவர்கள் நடத்தி வந்தார்கள். பின்னல், அமிர்த பஜார் . பத்திரிகை 1868, மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. அதுவரை இளமை காரணமாகப் பத்திரிகை வேலைகளில் சம்பந்தப்படாமல் விலகியிருந்த கடைசி சகோதரர் மோதிலாலும் அச்சமயம் மற்ற சகோதரர்களுடன் சேர்ந்து கொண்டார். இவர்தான் பிரசித்தி பெற்ற மோதிலால் கோஷ். தொண்டு கிழமாகும் வரை இவர் அமிர்த பஜார் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து, தேசிய வெறி குன்ருது, வீரத்தில் மாசு ஒட்டாதபடி, ஊழியம் செய்து வந்தார். வங்காளத்திலே எப்பொழுதும் எவர் ஒரு நல்ல காரியத்தை ஆரம்பித்தாலும் உடனே பத்துப் பேர் கூடி 64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/69&oldid=855540" இலிருந்து மீள்விக்கப்பட்டது