ஜெயில் அடிமை நாடுகளின் சட்டங்கள் அடிமைத்தனத்தை வளர்த்து நிலைநாட்டும் முறையில் அமைகின்றன. ஆகவே, சட்டத்திற்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு தெளிவாகிறது. இதல்ைதான், சட்டம் என்பது ஒர் அரசியல் முறை, சட்டந்தான் அரசியல் என்று லெனின் அழுத்தங் திருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிரு.ர். கற்கால அரசியல் முறைகளின் போக்கினுல் நாடு தோறும் சில கோடீச்வரர்களும், சில ஆயிரம் பனக் காரர்களும், பல கோடி ஏழைகளும் இருக்கின்றனர். ஒரு பக்கத்திலே சில மாட மாளிகைகள் ; அடுக்காற் போல் குப்பை மேடுகளைப் போன்ற குடிசைகள். செல்வர்கள் கொழுந்து வளர்ந்து சுக போகங்களே அநுபவிக்கின்றனர். ஏழைகளோ, விவசாயக் கூலிக ளாகவும், ஆலேக் தொழிலாளராகவும் உழைத்து வயிறு வளர்க்கின்றனர். இக்க இரு வகுப்பாருக்கும், இவர்க ளுக்கு இடையிலேயுள்ள மத்திய வகுப்பாருக்கும் சட்டங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஆயினும், அவை ஏழைகளேயே அதிகமாய்ப் பாதிக்கும். ஒரு மூட்டை நெல்லே ஒரு செல்வன் திருடிலுைம், ஏழை திருடினுலும் தண்டனை ஒன்றுதான் . ஆல்ை, எவன் திருடுவான் 2 எவனுக்குத் திருட வேண்டிய அவசியம் உண்டு ? இப்பொழுது உலகில் நடந்துவரும் பல்லாயிரம் குற்றங்கள் அவைகளைச் செய்தவர்களின் குணப் பிசகுகளால் மட்டும் ஏற்பட்டவை அல்ல. சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வுகளாலும், அநீதி முறைக ளாலும் அவை ஏற்படுகின்றன. குற்றங்க ளுக்குச் 7
பக்கம்:ஜெயில்.pdf/13
Appearance