உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்ம பதம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44 ☐ தம்ம பதம்

161. தீமை பயக்கும் தீவினைகளைச் செய்தல் எளிது; நன்மை பயக்கும் நல்வினையைச் செய்தலே மிகவும் கஷ்டமாகும். (7)

162. முனிவர்களும், மேலோர்களும், தரும வழியில் நடப்பவர்களும் போதிப்பதை மடமையுள்ள மனிதன் புறக்கணித்துவிட்டுத் தீய நெறியில் செல்கின்றான்; (அதனால்) கட்டகப்புல்[1] (தன் கனியாலே தன்னை அழித்துக் கொள்வது) போல், தன்னையே அழிக்கும் கனியை-வினைப்பயனை-அடைகிறான். (8)

163. ஒருவன் தானாகவே பாவம் செய்கிறான், தானே தனக்குக் கேடு தேடுகிறான். ஒருவன் தானாகவே பாவத்தை விலக்குகிறான், தானே தன்னைப் புனிதமாக்குகிறான். சுத்தமும் அசுத்தமும் அவன் செயலே; எவனும் பிறனைப் புனிதமாக்குவதில்லை. (9)

164. எவ்வளவு உயர்ந்ததாயினும் பிறருடைய கடமைக்காக எவனும் தன் கடமையைக் கைவிடலாகாது; தன் கடமையைக் கண்டறிந்த பின்பு, அவன் அதையே நன்றாக ஆற்றி வருவானாக. (10)


  1. கட்டகப் புல்-நாணல் கொறுக்கைப் போன்ற ஒருவகைப் புல்; அதன் பூ கனியாக முதிர்ந்ததும் அது அழிந்துவிடும் என்பர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/46&oldid=1357782" இலிருந்து மீள்விக்கப்பட்டது