பக்கம்:தம்ம பதம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 ) தம்ம பதம்

161. தீமை பயக்கும் தீவினைகளைச் செய்தல் எளிது; நன் மை பயக்கும் நல்வினையைச் செய்தலே மிகவும் கஷ்டமாகும். (7)

162. முனிவர்களும், மேலோர்களும், தரும வழியில் நடப்பவர்களும் போதிப்பதை மடமையுள்ள மனிதன் புறக்கணித்துவிட்டுத் தீய நெறியில் செல் கின்றான்; (அதனால்) கட்டகப்புல் (தன் கனி பாலே தன்னை அழித்துக் கொள்வது) போல், தன்னையே அழிக்கும் கனியை-வினைப்பயனை - அடைகிறான். (8)

168. ஒருவன் தானாகவே பாவம் செய்கிறான், தானே தனக்குக் கேடு தேடுகிறான். ஒருவன் தானாகவே பாவத்தை விலக்குகிறான், தானே தன்னைப் புனிதமாக்குகிறான். சுத்தமும் அசுத்தமும் அவன் செயலே, எவனும் பிறனைப் புனிதமாக்குவ தில்லை. (9).

164. எவ்வளவு உயர்ந்ததாயினும் பிறருடைய கடமைக் காக எவனும் தன் கடமையைக் கைவிடலாகாது; தன் கடமையைக் கண்டறிந்த பின்பு, அவன் அதையே நன்றாக ஆற்றி வருவானாக. (10)

1. கட்டகப் புல்-நாணல் கொறுக்கைப் போன்ற ஒருவகைப் புல்; அதன் பூ கனியாக முதிர்ந்ததும் அது அழிந்துவிடும் என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/46&oldid=568659" இருந்து மீள்விக்கப்பட்டது