பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மடிமை ஒருவன் தன் விளக்கில் தண்ணிரை ஊற்றி நிரப்பினால், இருளை நீக்க முடியாது. உளுத்துப்போன கட்டையைக் கொண்டு தீக்கடைந்து நெருப்பை உண்டாக்க முடியாது. " + or கருத்துடைமையே நித்தியமான நிருவான மோட்சத்திற்கு வழி: மடிமையே மரணத்திற்கு வழி. கருத்துடையவர் இறப்பதில்லை; மடிமையுடையவர் இருக்கும்போதே இறந்தவராவர். ' As of அறிவில்லாத மூடர்கள் மடிமையுள் வீழ்கின்றனர்; அறிஞன் கருத்துடைமையைத் தனது முதன்மையான அருந்தனமாகப் பாதுகாக்கிறான். ' Mr. Mr. மடிமையுள் விழவேண்டாம், காமத்தோடு புலன்களின் இன்பங்களில் புகவேண்டாம். கருத்தோடு தியானம் செய்பவன் எல்லையற்ற இன்பத்தை அடைவான். '

மடிமையைக் கண்டு அஞ்சி, கருத்து ை மையில் களிப்படையும் பிக்கு, தவறி விழ முடியாது அவன் நிருவன மோட்சத்தின் அருகில் இருப்பான். ' ப. ராமஸ்வாமி 27