இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாகம் - 2 உலகம் உய்வதற்காக நான் தருமராஜனாக உலகிலே அவதரித்தேன்.
நான் மறுகரையை அடைந்துவிட்டதால், மற்றவர்கள் நதியைக் கடந்து வர உதவி செய்கிறேன். நான் முக்தியடைந்து விட்டதால், மற்றவர்கள் முக்தியடைய வழிகாட்டுகிறேன். நான் துக்க நிவாரணம் பெற்றுவிட்டதால், மற்றவர்கள் ஆறுதல் பெற்றுச் சேம நிலையை அடைவதற்கு உதவி புரிகிறேன்.
நீயேதான் முயற்சி செய்ய வேண்டும். ததாகதர் உபதேசம் மட்டுமே செய்வர். இந்த மார்க்கத்தில் இறங்கி, தியானத்தில் ஆழ்ந்தவர்களுக்கு (பாவம், மரணம் முதலிய மாரனுடைய பந்தங்கள் விலகும். - புத்தர்