கொண்டவர்களே! நான்' என்ற கொடிய தலைவன் இல்லை என்ற நற்செய்தியைக் கூறுகிறேன், கேண்மின் 'நான்' என்பது ஒரு தவறு, ஒரு மயக்கம், ஒரு கனவு. கண்களைத் திறந்து விழித்து எழுங்கள். விஷயங்களை உள்ளபடியே பாருங்கள். உங்களுக்குச் சாந்தி ஏற்படும். "
- *
மரம் தீப்பற்றி எரியும்போது புள்ளினங்கள் அதன்மீது குடியிருக்க முடியுமா? ஆசைகளால் ஏற்படும் சித்த விகாரமுள்ள இடத்திலே சத்தியம் தங்கியிருக்க முடியாது. இதை அறியாத கல்விமானைப் பெரிய முனி என்று பாராட்டினாலும், அவன் பேதையேயாவன். "
நெருப்பை நீறு மறைத்திருப்பதுபோல் அகங்கார எண்ணம் ஒவ்வோர் உயரிய இலட்சியத்தையும் மறைத்து விடுகின்றது; சாம்பரை மிதித்த பாதத்தை உள்ளேயுள்ள நெருப்பு சுட்டுவிடுகின்றது. "
இளமையில் பிரமசரியத்தைப் பேணாதவரும், செல்வத்தைத் தேடிக் கொள்ளாதவரும், உளுத்துப்போன விற்களைப் போல், பழமையை எண்ணி எண்ணிப் பரிதவிப்பார்கள், !
ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை; துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை; உடலோடு வாழ்வதற்கு நிகரானதுயர் வேறில்லை; சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை. ' -- புலனடக்கம் இல்லாமல் பொய் சொல்லித்திரியும் ஒருவன், தலையை முண்டிதம் செய்துகொள்வதால், முனிவனாகி விடமாட்டான். இச்சைகளுக்கும் பேராசைக்கும் அடிமைப்பட்டிருக்கும் ஒருவன் முனிவனாயிருப்பது எங்ஙனம்?
ஓ! பிக்குகளே ஒரு மரத்தை மட்டும் வெட்டினால் போதாது, ஆசைக் காட்டையே அரிந்து தள்ளுங்கள்! ஆசைக்காட்டிலிருந்து அபாயம் வருகிறது. காட்டையும் புதர்களையும் வெட்டி வீழ்த்திய பிறகு நீங்கள் விடுதலை பெறுவீர்கள். '
T 49