பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. அன்பு தாய் தன் ஒரே சேயை அரவணைத்துப் போற்றுவதுபோல, உங்கள் அன்பு உலகிலே பரவட்டும்; ஒவ்வோர் உயிரையும் அரவணைத்துக் கொள்ளட்டும்; தடையற்ற சுதந்திரத்துடன் அது உயரேயும் கீழேயும் பறக்கட்டும்; துவேஷமும் பகையும் விலகி ஒழியட்டும் "

இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்லை; பகைமை அன்பினாலேயே தணியும். இதுவே பண்டை அறநெறி, !

எத்தகைய நற்கருமங்களாயினும், அவை யாவும் இதயத்தைத் திறந்து வைக்கும் அன்பிலே பதினாறில் ஒரு பகுதிக்குக்கூட ஈடாகாது. இதயத்தைத் திறந்து வைக்கும் அன்பிலே அவை அடங்கியுள்ளன. அது (அன்பு) பிரகாசிக்கின்றது, ஒளியும் காந்தியும் அளிக்கின்றது. 32 | புத்தரின் போதனைகள்